சிவாஜிக்கு கொடுக்கப்பட்ட செவாலியே விருது.. சி.எம் செய்த கோளாறு.. முகத்தில் அடித்த மாதிரி சொன்ன ரஜினி

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் இப்போது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகிவருகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக தெரிகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் நடிக்கவிருக்கிறார். முதலில் இந்தப் படத்தை சுந்தர்.சிதான் இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் விலகிவிட்டார். அடுத்ததாக இயக்குநரை தேடும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

ரஜினிகாந்த்துக்கு இப்போது 75 வயது ஆகிறது. வயது, அனுபவம் காரணமாக இப்போது ரொம்பவே பக்குவமாக இருக்கிறார். எதுவாக இருந்தாலும் வார்த்தைகளை யோசித்தும், அளந்தும்தான் விடுகிறார். ஆனால் தன்னுடைய இளமை காலத்தில் அவர் அப்படி இருந்ததே இல்லை. Once Upon A Time He Lived A Ghost என்கிற ரீதியில்தான் சூப்பர் ஸ்டார் வாழ்ந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஏகப்பட்ட பிரச்னைகளையும் சந்தித்திருக்கிறார்.

என்ன பிரச்னைகள்?: 80களில் அவர் உச்சத்தில் இருந்தபோது குடித்துவிட்டு வந்து ஏர்போர்ட்டில் இருக்கும் அதிகாரிகளிடம் தகராறு செய்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. அதுமட்டுமின்றி தனக்கு கோபம் வந்துவிட்டால் கைகளைகூட ஓங்கிவிடுவார். அந்த அளவுக்கு முரட்டு ஆளாக இருந்தார் என்று அவரிடம் நெருங்கி பழகியவர்கள் சொல்லியதுண்டு. திருமணத்துக்கு பிறகு அந்த குணம் கொஞ்சம் குறைந்தாலும் முழுவதுமாக போகவில்லை. தனது மனதில் பட்டதை எதற்காகவும், யாருக்ககவும் அஞ்சாமல் பேசிவிடும் வழக்கத்தை கொண்டிருந்தார்.

Rajinikanth s Angry Reaction to Jayalalithaa at a Public Event Insider Reveals
Photo Credit:

ரஜினி Vs ஜெயலலிதா: முக்கியமாக அவருக்கும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும்தான் ஏழாம் பொருத்தமாக இருந்தது. அவர் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது என்று ஓபனாக அடித்தார். இதனால் அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனின் பதவி பறிபோனது. அதேபோல் இன்னொரு மேடையில், 'இனியும் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்தார் என்றால்; தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது' எனவும் ஒரு போடு போட்டார். மேலும், ஒரு தேர்தலில் திமுக - தமக கூட்டணிக்கு வெளிப்படையாக தனது ஆதரவையும் தெரிவித்தார்.

போயஸில் பிரச்னை: மேடைகளில்தான் இப்படியென்றால் இரண்டு பேரும் வசித்த போயஸ் கார்டனிலும் பிரச்னைதான். ரஜினி வரும்போது ஜெ வந்தால் இவரது கார் மறிக்கப்படுவதை பார்த்து காண்டான அவர்; சட்டென்று காரிலிருந்து இறங்கி நடக்க; ஜெயலலிதாவே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் கூடியதாகவும் ஒரு பேச்சு ஓடுவதுண்டு. இந்நிலையில் ஜெயலலிதாவுடன் ரஜினியின் மோதல் பற்றி பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

அந்தணன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சிவாஜிக்கு செவாலியே விருது கொடுக்க முடிவு செய்து அந்த நாட்டிலிருந்து (பிரான்ஸ் என்று நினைக்கிறேன்) இங்கே கொண்டு வந்தார்கள். சென்னையில் இருக்கும் ஒரு ஆடிட்டோரியத்தில்தான் விழாவை நடத்தினார்கள். அப்போது ஜெயலலிதாதான் முதலமைச்சர். ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துவிட்டார்கள். கங்கை அமரன் ஒருபக்கம் இசை கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஜெயலலிதா அம்மையார் வரவில்லை.

கடுப்பான ரஜினிகாந்த்: இதனால் சிவாஜி, ரஜினி உள்ளிட்டோர் எல்லாம் கடுப்பாகிவிட்டார்கள். ஒருவழியாக அந்த அம்மா வந்துவிட்டார். அவர் வந்தபோது அனைவருமே எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்கள். ரஜினியோ சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டார். அதுவே எல்லோருக்கும் பெரிய ஷாக். அதனைத் தொடர்ந்து பேசிய ரஜினி; ஜெயாவை பார்த்து, அவர் லேட்டாக வந்ததை குறிப்பிட்டு'இங்கே பாருங்கள். இதெல்லாம் எனக்கு பிடிக்காது' என விரலை உயர்த்தி கூறினார். அனைவருமே உச்சக்கட்ட அதிர்ச்சியாகிவிட்டார்கள். ஏனென்றால் ஜெயாவை பார்த்து எல்லோரும் தொடை நடுங்கிக்கொண்டிருந்த காலம் அது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X