Rajinikanth - தலைவா... பொது இடத்தில் செம பல்பு வாங்கிய ரஜினிகாந்த்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடிகர் ரஜினிகாந்த் பொது இடத்தில் செம பல்பு வாங்கிய சம்பவம் தெரியவந்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

சினிமா மீது இருக்கும் ஆசையால் நடத்துநர் பணியை உதறிவிட்டு சினிமா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். பிறகு கே பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். சினிமாவில் அவர் அறிமுகமாகும்போது எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம் இல்லை, கறுப்பு நிறத்தவர் என பல கேலிகளையும், பல போராட்டங்களையும் சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பக்காலட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

Rajinikanth shared his experience when he went to a public place

சம்பளம் கேட்டதால் வந்த அசிங்கம்: ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினி ஒரு பட யூனிட்டில் சாப்பிட்டார். அப்போது ப்ரொடக்‌ஷன் மேனேஜரிடம் இன்னொரு ஆம்லேட் கேட்டார் ரஜினி. அதற்கு அவரோ, கோழி இன்னும் முட்டை போடல. போட்டதும் தரேன் என கூறியிருக்கிறார். இப்படி பல அவமானங்களை சந்தித்திருக்கிறார் ரஜினி. இதனை அவரும் ஏகப்பட்ட மேடைகளில் சொல்லியிருக்கிறார். அதேபோல் ஒரு படத்தில் பணியாற்றும்போது சம்பள கேட்டதற்காக அங்கிருந்து வெளியேற்றவும் பட்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார்: இப்படி பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக லால் சலாம் படத்தில் நடித்துவருகிறார்.

லோகேஷ் படம்: இந்தப் படத்துக்கு பிறகு ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே நிச்சயம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் படங்களாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி தலைவர் 171 என சொல்லப்படும் லோகேஷ் கனகராஜுடன் இணையும் படம்தான் ரஜினிக்கு கடைசி படமாக இருக்கும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

உருவம் பாரு எளிமை: இப்படி ரஜினியை சுற்றி ஏகப்பட்ட செய்திகள் ஓடிகொண்டிருந்தாலும் அவர் எப்போதுமே எளிமையாகவே இருப்பார் என்றும் பலர் கூறுவார்கள். வாலியேகூட அதனை வைத்துதான் குசேலன் படத்தில் 'அவர் உருவாம் பாரு எளிமை அதுதானே அவருக்கு வலிமை' என்று எழுதினார். இந்தச் சூழலில் பொது இடத்தில் ரஜினி பல்பு வாங்கிய சம்பவமும் அதை அவர் படு இயல்பாக எடுத்துக்கொண்டதும் தெரியவந்திருக்கிறது.

பொது இடத்தில் பல்பு: அதாவது ரஜினிகாந்த் ஒருமுறை மாறு வேடத்தில் வெளியே சென்றிருக்கிறார். அப்போது யாரோ ஒருவர் தலைவா என பின்னாலிருந்து கத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் ரஜினியை ரசிகர்கள் தலைவா என அழைப்பது வழக்கம். எனவே தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்களோ என நினைத்து பதற்றமடைந்து வேகமாக நடந்து சென்றிருக்கிறார் ரஜினி. மேலும் அந்த சத்தம் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கிறது. இதனால் ரொம்பவே டென்ஷனான ரஜினிக்கு கை, கால் எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டதாம். குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் அந்த சத்தம் கேட்கவில்லையாம். உடனே இவர் திரும்பி பார்த்தபோது தலைவா என யாரோ ஒருவர் யாரையோ கூப்பிட்டிருக்கிறார்.

இதனை தெரிந்துகொண்ட ரஜினி அப்பாடா தப்பித்தோம் என நினைத்து ஆட்டோவில் ஏறி அந்த இடத்தை காலி செய்திருக்கிறார். இந்தத் தகவலை ரஜினியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த விஷயத்தை ரஜினி எவ்வளவு இயல்பாக எடுத்துகொண்டு அவர் வேறு யாரையோ தலைவா என கூப்பிட்டிருக்கிறார் என்பதை ரொம்ப எதார்த்தமாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே ரஜினியின் இந்த குணம்தான் அவரை உச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது என தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X