அந்த ஹீரோவின் படம்.. முதல் நாள் முதல் காட்சி.. முண்டியடித்து டிக்கெட் வாங்கி பார்த்த ரஜினி

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்தது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருக்கிறார். படமானது ஆகஸ்ட் 14ல் ரிலீஸாகிறது. அதனைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படமும் ரிலீஸாகிறது. இந்நிலையில் ரஜினியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்ற ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்தார். அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து ட்ரோலுக்கும் உள்ளானது. இதன் காரணமாக அவரது நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் உணர்த்தியது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 700 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது.

வேட்டையன் பராக்: அந்தப் படத்தை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வழக்கம்போல் ரஜினிகாந்த்தின் நடிப்பு அவ்வளவு எனர்ஜியாக இருந்தது. அதனை பார்த்த ரசிகர்களோ இவருக்கு வயது ஆகிறதா இல்லையா என்று சந்தேகப்பட்டனர். அந்த அளவுக்கு அவர் நடிப்பில் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth shares throwback incident of buying tickets for MGR movie
Photo Credit:

கூலி: தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா,சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்திலிருந்து சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் பெரிய வரவேற்பை பெற்றது. நேற்றுக்கூட அமீர் கானின் கேரக்டர் பெயர் அறிவிக்கப்பட்டது. சிங்கிள், போஸ்டர் எல்லாம் பட்டையை கிளப்பின.

ஜெயிலர் 2: கூலி ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்போது அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதேபோல் இந்த பாகமும் ஹிட்டாக வேண்டும் என்ற முனைப்பில் நெல்சான் திலீப்குமார் உழைத்துவருகிறார். ரஜினிகாந்த்தும் தனது ஒத்துழைப்பை கொடுத்துவருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது பெங்களூரில் ரஜினி இருந்தபோது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடித்த ஒரு படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக முண்டியடித்து டிக்கெட் வாங்கினாராம். அப்போது அவருக்கு அருகில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவர், 'ராஜ்குமார் படத்துக்கு டிக்கெட் வாங்கிவிட்டாய். முடிந்தால் எங்கள் எம்ஜிஆர் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் எடுக்க முடியுமா?' என்று சவால் விட்டார்.

40 டிக்கெட்டுகள்தான்: அதை ஏற்றுக்கொண்டு எம்ஜிஆரின் ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் எடுப்பதற்காக காலை 4.30 மணிக்கே சென்றுவிட்டேன். அந்த தியேட்டரில் இருந்தது மொத்தமே 40 டிக்கெட்டுகள்தான். ஆனால் அந்தக் காட்சிக்கு வந்திருந்தவர்களோ 200 பேர் இருந்திருப்பார்கள். அந்த 200 பேரில் அடித்து பிடித்து ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவுக்கான டிக்கெட்டை வாங்கிவிட்டேன். அதை எனது வாழ்நாளில் மறக்க முடியாது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X