Rajinikanth: ரஜினிக்கு ரெட் கார்டு போட்ட விநியோகஸ்தர்கள்... ஒத்தையாக சம்பவம் செய்த சூப்பர் ஸ்டார்!
சென்னை: 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், 1990களில் சம்பள பிரச்சினை காரணமாக ரஜினிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதனை தனது ஒரே திரைப்படம் மூலம் திரும்பப் பெற வைத்துள்ளார் அவர்.
ஒத்தையாக சம்பவம் செய்த சூப்பர் ஸ்டார்: 1990களில் தான் ரஜினியை சூப்பர் ஸ்டாராக கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகர்கள். 1980களின் இறுதியில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வந்த ரஜினி, 90க்குப் பிறகு உச்ச நட்சத்திரம் என்ற சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்து கொண்டார். ரஜினியின் படங்கள் அனைத்தும் கமர்சியலாக ஹிட் அடித்ததால் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்நிலையில், 1990களின் ஆரம்பத்தில் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதால் சில நேரங்களில் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதனால், விநியோகஸ்தர்கள் சங்கமும் தென்னிந்திய நடிகர்கள் சங்கமும் இணைந்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்களாம். அதில் நடிகர்கள் அவர்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அந்த மீட்டிங்கில் கலந்துகொண்ட ரஜினிக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லையாம். அதனால், நடிகர்களின் மார்க்கெட் வேல்யூவை வைத்து தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதற்கு வரி, தியேட்டர் வாடகையை குறைப்பது தான் சரியான முடிவு, சம்பளத்தை குறைக்க வேண்டாம் என்றுள்ளாராம். ரஜினியின் இந்த கருத்தால் அந்தக் கூட்டத்தில் எந்த முடிவுமே எடுக்கப்படாமல் மீட்டிங் நிறைவுப் பெற்றுள்ளது.
அதனால் கடுப்பான விநியோகஸ்தர்கள், இனிமேல் ரஜினியின் படத்தை வாங்கக்கூடாது என முடிவெடுத்துள்ளனர். அப்போது தான், அதாவது 1993ல் விஜயா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உழைப்பாளி படத்தில் நடித்துள்ளார் ரஜினி. இதனால் ரஜினியும் தனது நெருங்கிய நண்பரான கமல்ஹாசனை சந்தித்து பேசி ஒரு முடிவெடுத்துள்ளார். அதன்பின்னர் உழைப்பாளி படத்தை ரஜினியே நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்துள்ளார்.

மேலும், சவுத் ஆற்காடு, நார்த் ஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளில் ரஜினியே படத்தை விநியோகம் செய்துள்ளார். அப்படி வெளியான உழைப்பாளி மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்று 150 நாட்களுக்கும் மேல் ஓடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதனால் பயந்துபோன விநியோகஸ்தர்கள் ரஜினியின் ரெட் கார்டை விலக்கிக்கொள்வதாக முடிவு எடுத்துள்ளனர்.
அதற்கு ஜாக்பாட்டாக 1994ம் ஆண்டு வெளியான பாட்ஷா விநியோகஸ்தர்களுக்கு வசூல் மழை பொழிந்துள்ளது. இப்படி ஒத்தையாக பல சம்பவங்கள் செய்ததால் தான் ரஜினியால் இன்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வர முடிகிறது என சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











