ரஜினி முதுகில் ஏறிய ராதிகா.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கூத்து.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் 2, தலைவர் 173, KHXRK ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. மூன்று படங்களின் மீதும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் அதீத ஆவல் இருக்கிறது. கமலுடன் நடிக்கும் படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் என்றும் நம்பிக்கையில் இருக்கிறார்கள் பலரும். தலைவர் 173 ஷூட்டிங்கும், கமலுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் மிக விரைவில் தொடங்கவிருப்பதாக திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

ரஜினிகாந்த்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. திரைத்துறையிலேயே அவரை போட்டியாக நினைத்தவர்கள்கூட சூப்பர் ஸ்டாரை உள்ளுக்குள் ரசிக்கத்தான் செய்வார்கள். அந்த அளவுக்கு அவரது ஆரா கோடம்பாக்கத்தில் பரவி கிடக்கிறது. இங்கு மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் என அத்தனை திரைத்துறையிலும் ரஜினிக்கென்று தனி மரியாதை இருக்கிறது. அதற்கு மிக மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவரது திறமை மட்டுமின்றி மற்றவர்களிடம் பழகும் விதம்தான்.

Rajinikanth Throwback Viral Story Reveals Superstar s Humble Side
Photo Credit:

ஈகோவே இல்லை: ரஜினியை பொறுத்தவரை சரியான கோபக்காரர்தான். ஆனால் பொறாமை படமாட்டார். அதேபோல் உச்சத்தில் இருக்கிறார்தான். ஆனால் யாரிடமும் ஈகோ பார்க்கமாட்டார். தன்னுடன் பணியாற்றியவர்களாக இருந்தாலும் சரி; வேறு எங்கேயோ திறமையாக பணியாற்றுபவர்களாக இருந்தாலும் சரி; உடனடியாக பாராட்டிவிடுவார். அதேபோல் அவர்களிடம் பேசும்போதுகூட ரொம்பவே பவ்யமாகத்தா பேசுவார். சமீபத்தில்கூட வடிவேலு முருகன் கொடுத்த பேட்டியில், தன்னிடம் ரஜினி பேசிக்கொண்டிருந்தபோது போர் அடிக்கிறேனா என கேட்டதாக தெரிவித்திருந்தார்.

பலருக்கு பாராட்டு: ரஜினியிடம் பாராட்டு பெற்றவர்கள் எக்கச்சக்கம் பேர் இருக்கிறார்கள். அதேபோல் தன்னை கிண்டல் செய்தவர்களாகவே இருந்தாலும்; அவர்கள் திறமைக்காரர்களாக இருந்தால் கண்டிப்பாக மதிப்பதற்கு தவறமாட்டார். கோமாளி படத்தில்கூட ரஜினியின் அரசியல் வருகை சமயத்தில் அவர் கொடுத்த ஒரு ஸ்டேட்மென்ட்டை வைத்து கலாய்த்திருந்தார்கள். ஆனால் அதை பெர்சனலாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக எடுத்துக்கொண்டார். மேலும் அதன் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனையும் அழைத்து பாராட்டத்தான் செய்திருந்தார்.

Also Read
விஜய்யை பார்த்ததும் விசித்திரம்.. காரில் நீச்சல் அடித்து முத்தம்.. தவெகவினரை கன்ட்ரோலே செய்ய முடியாதா?
விஜய்யை பார்த்ததும் விசித்திரம்.. காரில் நீச்சல் அடித்து முத்தம்.. தவெகவினரை கன்ட்ரோலே செய்ய முடியாதா?

புலியூர் சரோஜா பேட்டி: இப்படி தன்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரிடமும் நல்ல பெயரைத்தான் சம்பாதித்திருக்கிறார். முக்கியமாக தன்னுடைய வளர்ச்சிக்கு உடன் இருந்தவர்களை இன்னமும் மறக்கவில்லை. கலைஞானத்துக்கு வீடு கட்டி கொடுத்தார். எஸ்.பி.முத்துராமனின் டீமை செட்டில் ஆக்குவதற்காக ஒரு படத்தில் இலவசமாக நடித்துக்கொடுத்தார். இப்படி அவரது நல்ல குணங்களை பற்றி தொடர்ந்து சொல்லிக்கொண்டே செல்லலாம். இந்நிலையில் பிரபல நடன அமைப்பாளர் புலியூர் சரோஜா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

என்ன கூறினார்?: அவர் கொடுத்த பேட்டியில், "ரஜினியும், ராதிகாவும் ஆடிய போக்கிரிக்கு போக்கிரி ராஜா பாடல் ஷூட்டுக்காக லொக்கேஷனுக்கு சென்றிருந்தோம். அது பெரிய மலை. அப்போது இயக்குநர் மூவ்மென்ட்டை போட்டு காண்பிக்க சொன்னார். ரஜினி பெண்ட் செய்ய வேண்டும். அப்போது ராதிகா அவரது முதுகில் சிட்டுக்குருவி போல் தாவி குதித்து ஏற வேண்டும். உடனே இயக்குநர் என்னிடம், இங்கே நிற்பதற்கே கஷ்டமாக இருக்கிறது, இப்பட் ஒர் ஸ்டெப்பை சொல்கிறாயே என கேட்டார். நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டு வந்த ரஜினி, 'என்ன அக்கா என்னாச்சு' என கேட்க; நான் விஷயத்தை சொன்னேன். உடனே அவர், அதெல்லாம் செஞ்சிடலாம் என கூற; டேக் போனோம். நினைத்த மாதிரியே அவர்கள் ஆடினார்கள். எல்லோருமே க்ளாப் அடித்துவிட்டோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X