அந்த விஷயம்னா சரசரனு வருது.. இப்போ எப்படி சிக்கிருக்க பார்த்தியா?.. சந்தானத்தை கலாய்த்த ரஜினிகாந்த்
சென்னை: ரஜினிகாந்த் இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வெற்றியையும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியையும் சந்தித்தன. தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் சந்தானத்தை ரஜினிகாந்த் கலாய்த்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
பெங்களூருவில் பேருந்து நடத்துநராக இருந்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி நிற்கிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கு முன்னதாக நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படம் அக்டோபரில் ரிலீஸ்

தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு அநேகமாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.
சந்தானத்தை கலாய்த்த ரஜினி: இந்நிலையில் நடிகர் சந்தானத்தை ரஜினிகாந்த் கலாய்த்த விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது எந்திரன் படத்தில் ரஜினியுடன் சந்தானம் சேர்ந்து நடித்தார். அப்போது ஒரு சீனில் ரஜினிகாந்த் நடிப்பதை பார்த்துக்கொண்டே தான் பேச வேண்டிய டயலாக்கை விட்டுவிட்டாராம் சந்தானம். உடனே ரஜினிகாந்த் சந்தானத்திடம், 'என்னாச்சு’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த சந்தானம், நீங்கள் நடிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் சார் என்று கூறினாராம். அதற்கு ரஜினியோ, நான் நடிப்பதை பார்த்துவிட்டீர்கள்; நீங்கள் நடிப்பதை நான் பார்க்க வேண்டாமா என்று சொன்னாராம்.
அதேபோல் படத்தின் ஒரு சீரியஸ் காட்சியில் நடிக்க முடியாமல் திணறினாராம் சந்தானம். அதனை கவனித்த ரஜினிகாந்த், 'காமெடி சீனுனா சரசரனு பண்ணுற. சீரியஸ் சீனுனா இப்படி நிக்கிற. எப்படி சிக்கிருக்க பார்த்தியா என்று கலாய்த்தாராம். இதனை சந்தானம் பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











