பொண்டாட்டிய தேடி போறான் போறான் போய்ட்டே இருக்கான்.. விடாமுயற்சியை அன்றே கணித்த ரஜினிகாந்த்?

சென்னை: விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரொம்பவே சுமார் என்ற விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அஜித் என்ற மாஸ் ஹீரோவுக்குரிய எந்த விஷயமும் படத்தில் இல்லை என்று அவரது ரசிகர்கள் ஓபனாகவே கூறுகிறார்கள். பொதுவான ரசிகர்களோ இது ஒரு படமே இல்லை என்கிற தொனியில் விளாசி வருகிறார்கள். விமர்சன ரீதியாக அடி வாங்கிய விடாமுயற்சி வசூல் ரீதியாகவும் அடி வாங்கியிருக்கிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தடையற தாக்க, தடம், மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி அஜித்தை வைத்து படம் இயக்கப்போகிறார் என்று அறிவிப்பு வெளியானபோதே பலரும் சந்தோஷப்பட்டார்கள். ஏனெனில் தற்கால தலைமுறை இயக்குநர்களில் மகிழும் முக்கியமானவராக பார்க்கப்படுவதால் அஜித்தை வைத்து தரமான சம்பவம் செய்யப்போகிறார் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது.

throwback stories vidaamuyarchi ajith rajinikanth

பழைய சென்ட்டிமென்ட்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே மங்காத்தா படத்தில் அஜித் - திரிஷா - அர்ஜுன் ஆகியோர் நடித்திருந்தார்கள். அந்தப் படம் அஜித்தின் கரியரிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக மாறியது. இன்றுவரை மங்காத்தாவை கொண்டாடாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாக அந்த சென்ட்டிமென்ட்படி விடாமுயற்சி படமும் மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள்.

படம் சுமார்தான்: இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு விடாமுயற்சி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அப்செட்டே கிடைத்தது. அஜித்துக்கான மாஸ் சீன்கள், அழுத்தமான திரைக்கதை, வசனங்கள், மகிழ் திருமேனியின் க்ளாஸிக் டச், த்ரில்லர் டச் என எதுவுமே இல்லாமல் படம் ரொம்பவே தடுமாறியதை பார்த்து; இந்தப் படத்தை பார்க்க வந்தது விபரீத முயற்சியோ என்று முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். மேலும் இந்தப் படத்தில் அஜித் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் என்றும் பலர் கூறினார்கள்.

வசூலிலும் டல்: விமர்சன ரீதியாக இப்படி ரிவர்ஸ் கியரில் போன படம் வசூல் ரீதியாக ஆஃபே ஆகிவிட்டது. பொதுவாக அஜித்தின் படங்கள் என்றால் முதல் நாள் வசூலை வாரி குவிக்கும். ஆனால் விடாமுயற்சி படமோ முதல் நாள் வசூலில் ரொம்பவே பின் தங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமே 22 கோடி ரூபாய்தான் அப்படம் கலெக்ட் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் GOAT படத்தைவிடவும் விடாமுயற்சி முதல் நாள் வசூல் குறைவுதான்.

throwback stories vidaamuyarchi ajith rajinikanth

கணித்த ரஜினிகாந்த்: இந்நிலையில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது காலா படத்தின் விழாவில் பேசிய ரஜினிகாந்த், 'ஒரு இயக்குநர் என்னிடம் வந்து கதை சொன்னார். அந்தக் கதையில் ஹீரோ பொண்டாட்டியை தேடி போறான் போறான் போய்க்கிட்டே இருக்கான். நான் உடனே அந்த இயக்குநரிடம், இங்க பாருங்க நம்ம ரசிகர்களுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. நான் கதை கேட்கும்போது ரஜினியாக கேட்கமாட்டேன். ரசிகர்களில் ஒருவராகத்தான் கேட்பேன்.

நம்மை பொறுத்தவரை போறோமா ஒரு விஷயத்தை டக்குனு முடிக்கிறோமானு இருக்கணும். அதுதான் என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்கும். இது என்ன சார் அங்கே போறான் அங்கிருந்து வேறு எங்கோ போறான். இது செட் ஆகாது என சொல்லிவிட்டேன்" என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ பரவாயில்லையே விடாமுயற்சி பாணியில் சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் வந்த கதையை யோசிக்காமல் ரஜினி ரிஜெக்ட் செய்துவிட்டார். இந்த கணிக்கும் திறமைதான் அவரை இன்னமும் சூப்பர் ஸ்டாராக வைத்திருக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X