ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலித்த ரஜினிகாந்த்?.. காதலை சொல்ல சென்றபோது ஏற்பட்ட தடங்கல் இதுவா?
சென்னை: ரஜினிகாந்த் கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார்.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக அரசல் புரசலாக தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் பல வருடங்களாக அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். அந்த நாற்காலி அவருக்கானது மட்டும்தான் என்பது அவரின் ரசிகர்களுடைய நம்பிக்கை. அதற்கேற்றபடிதான் அவரது கரியர் கிராஃப்பும் இருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே மரண அடி வாங்கின. தோல்வி என்பதோடு மட்டுமில்லாமல் பலரால் கடுமையான ட்ரோலுக்கும் உள்ளாக்கப்பட்டது. இதனால் ரஜினியும் அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட்டானார்கள்.

ஜெயிலர்: அப்படிப்பட்ட சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தி ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலக அளவில் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகி தங்கள் தலைவர் எப்போதும் ஃபார்மை இழக்கமாட்டார் என்று கூறினார்கள். ஜெயிலர் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினி. ஆனால் அந்தப் படம் சுமாராகத்தான் போனது.
கூலி, ஜெயிலர் 2: வேட்டையன் படத்தின் சுமார் வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. கண்டிப்பாக கூலி வசூல் வேட்டை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் அநேகமாக தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். அதனையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது. சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை சின்சியராக காதலித்ததாகவும்; காதலை சொல்ல சென்றபோது தடங்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது, ஸ்ரீதேவியுடன் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. அவரை ஸ்ரீதேவியின் அம்மாவும் தனது வீட்டில் ஒருவராகத்தான் பார்த்தாராம். ஸ்ரீதேவியுடனான பழக்கம் ரஜினிக்கு காதலாக மாறிவிட்டதாம்.
ஒருமுறை அவரிடம் காதலை சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து இயக்குநர் சிகரம் கே.பாலசந்ந்தருடன் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் வீட்டுக்கு சென்றாராம். அன்று அவரது வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்ததாம். சரி இதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்து காதலை சொல்வதற்கு அருகே சென்றிருக்கிறார் ரஜினி. அந்த சமயம் பார்த்து மின்சாரம் போய்விட்டதாம். காதலை சொல்ல செல்லும்போது இப்படி மின்சாரம் போய்விட்டதே.. இது நல்ல சகுனம் இல்லை என்று முடிவு செய்து தனது காதலை சொல்லவே இல்லையாம். இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











