Rajinikanth: காதலர்தான்.. ஆனாலும் ரஜினியை கல்யாணம் செய்துகொள்வதில் லதாவுக்கு இருந்த சங்கடம் - விபரம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வரும் 12ஆம் தேதி 74வது பிறந்தநாள். கூலி படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் அடுத்த ஆண்டில், திரை உலகில் தனது பொன் விழாவைக் கொண்டாடவுள்ளார். இதனால் அடுத்த ஆண்டில் இவர் தனது நடிப்பில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இப்படியான நிலையில், வரும் 12ஆம் தேதி இவரது பிறந்த நாளுக்காக இவரது ரசிகர்கள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை எடுத்து வருகின்றனர். இப்படியான நிலையில், இவரது சொந்த வாழ்க்கை குறித்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திருமணத்திற்கு முன்னர், சில நடிகைகளுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அவரது திருமணத்திற்குப் பின்னர், ரஜினிகாந்த் குறித்து கிசுகிசுவோ, வதந்தியோ என எதுவுமே வந்ததில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் லதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது காதல் இருந்தாலும் அவரைத் திருமணம் செய்து கொள்வதில் ஒரு சங்கடம் இருந்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதியர், தமிழ் சினிமா உலகில் மட்டும் இல்லாமல், பலருக்குமே எடுத்துக்காட்டாக இருக்கும் தம்பதியர்கள் எனலாம். ரஜினியின் திரை வாழ்க்கை முடங்கிப் போய்விடவில்லை, என்றாலும், அவர் உள்ள உச்சத்திற்கு ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றாலே பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கார் டிரைவராக இருப்பது என்பதே, மிகவும் பரபரப்பான வாழ்க்கை முறையில்தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, ரஜினிகாந்த்தின் மனைவியாக, அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றால் அவரது தினசரி வாழ்க்கை மிகவும் பரபரப்பானதாகத்தான் இருக்கும்.

நம்பிக்கை: குழந்தைகள், குடும்பம், கணவருக்கு ஆறுதலாக, பக்கபலமாக இருப்பது, உறுதுணையாக இருப்பது என இப்போது சூப்பர் ஸ்டாருக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கின்றார் லதா. அதனால்தான் அவர்களின் இல்லற வாழ்க்கை, கிட்டத்தட்ட, 44 ஆண்டுகளாக இணை பிரியாத தம்பதிகளாக உள்ளனர். இவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரு மகள்கள் உள்ளனர்.
காதல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, தனது உறவினர் ஒய்.ஜி. மகேந்திரன் மூலம் பேட்டி எடுக்கச் சென்றார் லதா. இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே காதல் துளிர் விட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி, மனதைப் பரிமாறிக்கொண்டனர். காளி படத்தினை இருவருமே ஒன்றாக சேர்ந்து பார்த்துள்ளார்கள். மேலும், ரஜினியைச் சந்திக்கும் முன்னர், லதாவின் வீட்டார், லதாவின் திருமணம் தொடர்பாக பேசியுள்ளனர். அதற்கு லதாவோ, மூன்று ஆண்டுகள் போகட்டும் அப்பறம் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

சங்கடம்: அதன் பின்னர், ரஜினியைச் சந்தித்து, காதல்வயப்பட்டுவிட்டார். இப்போது ரஜினி வீட்டிற்கு வந்து பெண் கேட்கப் போகின்றார். அப்போது, சரி என எப்படி பெற்றோர்களிடம் கூறுவது என வெட்கத்தோடும் கொஞ்சம் சங்கடத்தோடும் இருந்துள்ளார் லதா. ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததால், இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில், மிகவும் எளிமையாக மாலை மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











