Rajinikanth: என்ன சொல்றீங்க?.. 16 வயது நடிகையை பெண் பார்க்கப் போன ரஜினிகாந்த்.. ஆனால்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொள்வதற்கு முன்பே ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த காதல் பிரேக்கப் ஆகிடுச்சு என்றும் சில மேடைகளில் அவரே வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனால், பிரபல நடிகை ஒருவரை ரஜினிகாந்த் பெண் பார்க்க சென்றது குறித்து பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்றை இயக்குநர் கே. பாலசந்தர் ஒருமுறை வெளிப்படையாக பேசியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.
தமிழில் மட்டுமின்றி இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடிகைகள் ரஜினிகாந்த் உடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என போட்டி போட்டு வந்தனர். ஆனால், ரஜினிக்கே ரொம்பவே பிடித்த நடிகை என்றால் அது ஸ்ரீதேவி தான். நடிகை ஸ்ரீதேவியை தான் ரஜினிகாந்த் இளம் வயதில் பெண் கேட்டு சென்றதாக பாலசந்தர் த்ரோபேக் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

ஒன்றாக இணைந்து: ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஜோடிகளாக வலம் வந்தனர். ஸ்ரீதேவி தனக்கு தங்கை போன்றவர் என கமல்ஹாசன் ஒரு மேடையில் பேசியிருப்பார். ஆனால், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஜோடி பொருத்தத்தை பாராட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். மூன்று முடிச்சு படத்தில் தொடங்கி அபூர்வ ராகங்கள், ஜானி, 16 வயதினிலே, பிரியா உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
16 வயதிலேயே பெண் பார்க்க சென்ற ரஜினி: ஸ்ரீதேவியும் ரஜினிகாந்தும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், ஸ்ரீதேவியின் அம்மாவுக்கும் ரஜினிக்கும் இடையேயும் நல்ல நட்பு இருந்திருக்கிறது. புதுமனை புகுவிழாவுக்காக ரஜினிகாந்தை ஸ்ரீதேவி அம்மா அழைத்திருக்கிறார். அப்போது ஸ்ரீதேவியை பார்த்து பெண் கேட்டு விடலாம் என ரஜினிகாந்த் நினைத்திருக்கிறார். ஆனால், ஒரு சிறு தடங்கல் காரணமாக பெண் கேட்காமல் ரஜினி வந்து விட்டதாக பாலசந்தர் ரிவீல் செய்திருந்தார்.

கரன்ட் கட்: சமீபத்தில் ரம்பா அளித்த பேட்டியில் அருணாச்சலம் படத்தின் ஷூட்டிங்கின் போது கரன்ட் கட் ஆகிடுச்சு, அதை வைத்து ரஜினிகாந்த் பண்ண காமெடியை சொல்லி இருந்தார். அது வேறுவிதமாக சர்ச்சையை கிளப்பியது. ஆனால், அதே போன்ற ஒரு கரன்ட் கட் தான் 16 வயதில் ஸ்ரீதேவியை பார்த்து பெண் கேட்க நினைத்த ரஜினிகாந்த் கேட்காமல் வர காரணம் என்றும் கே. பாலசந்தர் கூறியிருக்கிறார்.
போனி கபூருடன் திருமணம்: நடிகை ஸ்ரீதேவி தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நிலையில், இந்தியிலும் பிசியான நடிகையாக மாறினார். கடந்த 1996ம் ஆண்டு தான் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் ஸ்ரீதேவிக்கும் போனி கபூருக்கும் பிறந்தனர். அந்த இருவரும் தற்போது சினிமாவில் நடிகைகளாக ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கும் இரு மகள்கள்: லதா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இருவரும் இயக்குநர்களாக தங்களுக்குப் பிடித்த துறையில் பிரபலமாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











