ரஜினிகாந்த் பேச பேச கண் கலங்கிய லதா.. யப்பா என்னா லவ்.. அவங்க இல்லைனா இவர் இல்லை போல

சென்னை: ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்த அவர்; அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்தார். அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். வயதாகிவிட்டாலும் அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் இன்னும் குறையாததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். கண்டிப்பாக கூலி, ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.

இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவருக்கு பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களே. இடையில் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்து ட்ரோல்களையும், விமர்சனத்தையும் பெற்றன. இதனால் அவரும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட் ஆகினர். மேலும் இத்தனை வருடங்களாக ரஜினி வசம் இருந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி அவரிடமிருந்து சென்றுவிடுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

Throwback Stories Rajinikanth

தட்டி தூக்கிய ஜெயிலர்: ஆனால் அந்த சீன்லாம் இல்லை என்று ஜெயிலர் படம் உணர்த்தியது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினிக்கு ஏற்றபடி சீன்கள், திரைக்கதை என ஒவ்வொரு விஷயத்தையும் நெல்சன் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். இதன் காரணமாக படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது. மேலும் அந்தப் படத்தின் வெற்றி காரணமாக ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகிய மூன்று பேருக்கும் விலையுயர்ந்த காரை பரிசாகவும் கொடுத்தார் தயாரிப்பாளர் கலாநிதிமாறன்.

வேட்டையன் ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் லைகா தயாரிப்பில் கமிட்டானார் ரஜினி. அதன்படி லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்று நடித்தார். படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. ஜெயிலரில் பிடித்ததை இதில் விட்டுவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் ஏக்கமடைந்திருக்கின்றனர். இருந்தாலும் ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்த வேட்டையன் திரைப்படம் ஏகப்பட்ட நம்பிக்கையை வைத்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் அந்தப் படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டையை கிளப்புவார் என எதிர்பார்த்த ரசிகர்கள்: ஞானவேல் இயக்கிய முதல் படமான ஜெய் பீம் பெரும் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த்துக்காக இயக்குநர் தரமான சம்பவம் செய்வார் என்று கூறிய ரசிகர்கள்; இது கமர்ஷியல் படமாக இருந்தாலும் கண்டிப்பாக மக்களுக்கும், சமூகத்துக்கு தேவையான கருத்தைத்தான் சொல்லும்வகையில் அமைந்திருக்கும் என்றும் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் நினைத்தபடிதான் படம் இருந்தாலும் முழுவதுமாக திருப்தியை கொடுக்கவில்லை. ஏதோ ஒன்று படத்தில் மிஸ்ஸாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனால் ரஜினிக்கு அந்தப் படம் சுமார் ஹிட் லிஸ்ட்டிலேயே இணைந்துவிட்டது.

கூலி, ஜெயிலர் 2: அவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் நாகார்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், அமீர் கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்து முடித்த கையோடு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு சென்றுவிட்டார் ரஜினி. அந்தப் படத்தின் ஷூட்டிங் அட்டப்பாடியில் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து ஜெயிலர் வைபினை மீண்டும் தங்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

ரஜினியின் குணாதிசியம்: ரஜினியின் Professional வாழ்க்கை இப்படியாக போய்க்கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க அவரது குணத்தை பொறுத்தவரை தனது மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்துகொண்டிருந்தவர். அதாவது ஒருகட்டத்தில் ரஜினிகாந்த் வளர்ந்த பிறகு திடீரென ஒரு முடிவு எடுத்தார் அவர். அதாவது குடும்பம், சினிமா என அத்தனையையும் விட்டுவிட்டு சாமியாராக போய்விடலாம் என்பதுதான் அது. ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் பதறி துடித்தார்கள். பிறகு அவருடன் நெருங்கி பழகிய பாலசந்தர், கமல் ஹாசன், எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்டோர் கேட்டுக்கொண்ட பிறகுதான் அந்த முடிவிலிருந்து வெளியே வந்தார் அவர். அதனைத் தொடர்ந்து ரஜினி தனது மனைவி லதா மற்றும் மகள்கள் மீது மேற்கொண்டு அட்டாச் ஆக ஆரம்பித்தார்.

அரசியலில் ரஜினி: அதேபோல் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு அதனை அவர் உறுதியும் செய்தார். ஆனால் இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை அவர் அரசியலுக்கு வரும் முடிவிலிருந்து ஜகா வாங்கினார். அது அவருக்கு பெரும் விமர்சனத்தை பெற்றுக்கொடுத்தது. ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்; அவர்கள் எல்லாம் பாவம் என்று பலரும் ஓபனாகவே அவர் மீது வார்த்தை தாக்குதலை தொடுத்தார்கள்.

அரசியல் மேடைகளில் ரஜினிகாந்த்: அவர் அரசியல் களத்துக்கு வரவில்லை என்றாலும் அரசியல் மேடைகளில் தலைகாட்டி வருகிறார். அண்மையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில்கூட அவர் கலந்துகொண்டு; திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் சீனியர் ஸ்டூடண்ட்ஸ் என்று பேச; அவர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை கிண்டல் செய்துவிட்டார் என்று சர்ச்சை கிளம்பியது. அதற்கு ரஜினி, துரைமுருகன் இருவருமே விளக்கமளித்துவிட்டதால் பிரச்னை ஓய்ந்தது. முக்கியமாக ரஜினிகாந்த் ஒரு கட்சியின் மேடையில் மட்டும் தலை காண்பிப்பதை வழக்கமாக வைத்திருக்காதவர். மேலும் அனைத்து கட்சி தலைவர்களுடனும் அவர் எப்போதுமே சுமூகமான உறவை வைத்துக்கொள்ளவே விரும்புபவர்.

ட்ரெண்டாகும் ரஜினியின் பேச்சு: இந்நிலையில் தனது மனைவி லதா குறித்து ரஜினி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிகரெட், அசைவம், மது ஆகிய மூன்றையும் அளவுக்கதிகமாக பயன்படுத்தியவர்கள் எல்லாம் 60 வயதை தாண்டியது இல்லை. நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன். காலையிலேயே அசைவம்தான் சாப்பிடுவேன். ஏகப்பட்ட சிகரெட்டுகள் பிடிப்பேன். ஆனால் அவற்றிலிருந்து எல்லாம் நான் வெளியே வந்ததற்கு முக்கிய காரணம் மனைவி லதாதான். அவர் வந்துதான் என் மீது அளவுக்கதிகமான அன்பை செலுத்தி என்னை அந்தப் பழக்கங்களிலிருந்து அழைத்து வந்தார். மருத்துவர்களிடம் என்னை செல்ல வைத்து; என்னை முழுக்க முழுக்க ஒரு ஒழுக்கத்துக்குள் கொண்டுவந்தது லதாதான்" என்றார். அவரது இந்தப் பேச்சை கேட்ட லதா கீழே அமர்ந்து கண்களும் கலங்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X