Rajinikanth - தீவிர கஷ்டம்.. சொத்துக்களை விற்க முடிவெடுத்த குருநாதர்.. ரஜினி செய்த செம உதவி
சென்னை: ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வயதாகிவிட்டாலும் அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் இன்னும் குறையாததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். ரஜினிகாந்த் எவ்வளவு உச்சத்துக்கு சென்றாலும் தான் வந்த பாதையை மறக்காதவர் என்று அவருடன் நெருங்கி பழகியவர்கள் சொல்வது உண்டு. அப்படிப்பட்ட விஷயம்தான் இப்போது தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இதுவரை 170 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களே. இடையில் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்து ட்ரோல்களையும், விமர்சனத்தையும் பெற்றன. இதனால் அவரும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட் ஆகினர். மேலும் இத்தனை வருடங்களாக ரஜினி வசம் இருந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி அவரிடமிருந்து சென்றுவிடுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

வேட்டையன்: ஆனால் ஜெயிலர் படம் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் லைகா தயாரிப்பில் கமிட்டானார் ரஜினி. அதன்படி லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்று நடித்தார். படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. ஜெயிலரில் பிடித்ததை இதில் விட்டுவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் ஏக்கமடைந்திருக்கின்றனர். இருந்தாலும் ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்துவரும் வேட்டையன் படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
பட்டையை கிளப்புவார்: ஞானவே இயக்கிய முதல் படமான ஜெய் பீம் பெரும் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த்துக்காக இயக்குநர் தரமான சம்பவம் செய்வார் என்று கூறும் ரசிகர்கள்; இது கமர்ஷியல் படமாக இருந்தாலும் கண்டிப்பாக மக்களுக்கும், சமூகத்துக்கு தேவையான கருத்தைத்தான் சொல்லும்வகையில் அமைந்திருக்கும் என்கின்றனர். படத்தின் டைட்டில் டீசர் நல்ல வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 171: வேட்டையன் படத்தை முடித்துவிட்டு தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார் ரஜினி. அதனை கோலிவுட்டின் இப்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. எனவே அதனை இதில் போக்கும் விதமாகவும்; கமல் ஹாசனுக்கு விக்ரம் படத்தை வைத்து எப்படி பிரமாண்ட வெற்றியை கொடுத்தோமோ அதேபோல் ரஜினிக்கும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது டீமுடன் படத்துக்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
நன்றி மறக்காத ரஜினிகாந்த்: இதற்கிடையே ரஜினிகாந்த் எவ்வளவுதான் உயரத்துக்கு சென்றாலும் தான் வந்த பாதையையும், தான் வளர்வதற்கு காரணமாக இருந்தவர்களையும் மறக்காதவர். அந்தவகையில் தன்னை அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் மீது அளவு கடந்த மரியாதையை வைத்திருப்பவர். பாலசந்தர் ஃபோன் செய்தால்கூட ரஜினிகாந்த் எழுந்து நின்றுதான் பேசுவார் என்று பல வருடங்களாகவே ஒரு தகவல் கோலிவுட்டில் உண்டு.
உதவி செய்த ரஜினி: இந்நிலையில் பாலசந்தர் குடும்பத்துக்கு ரஜினிகாந்த் செய்த மிகப்பெரிய உதவி குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது கே.பாலசந்தர் குடும்பத்துக்கு ஒரு கட்டத்தில் கடுமையான பண நெருக்கடி ஏற்பட்டதாம். இதனால் சில சொத்துக்களை விற்க அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்தத் தகவல் தயாரிப்பாளர் தாணு மூலமாக ரஜினிகாந்த்தின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. உடனே பதறிப்போன ரஜினிகாந்த், சொத்துக்களை விற்பதெல்லாம் சரியாக இருக்காது என்று சொல்லி; பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் பேனரில் குசேலன் படத்தில் நடித்துக்கொடுத்தாராம். இதனால் அந்தக் குடும்பத்துக்கு ரொம்பவே உதவியாக இருந்ததாம்.


Click it and Unblock the Notifications











