விஜயகாந்த் இறப்பு செய்தியை தெரிந்துகொண்ட ரஜினி.. ஃபோனில் கொடுத்த ரியாக்ஷன் தெரியுமா?
சென்னை: கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமா ஹீரோக்கள் வரிசையில் எப்போதும் இருக்கக்கூடியவர் அவர். அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கிய அவர் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மீசை ராஜேந்திரனின் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜயகாந்த் என்றாலே பெரிய அறிமுகம் தேவையில்லை. 30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கென தனி இடம் ஒன்றை அவர் தக்க வைத்திருந்தார். அவர் சினிமாவுக்குள் அறிமுகமான நேரத்தில் ரஜினியும், கமலும் உச்சக்கட்ட பீக்கில் இருந்தார்கள். அவர்களோடு போட்டிப்போடு விஜயகாந்த்தால் வெல்லவே முடியாது; இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார் என்று பலரும் கிண்டலடித்தார்கள். ஆனால் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, திறமை, உழைப்பால் இவரும் ஹிட் கொடுக்க ஆரம்பித்தார்.
அரசியலில் என்ட்ரி கொடுத்த விஜயகாந்த்: சினிமாவில் தனக்கு இருக்கும் செல்வாக்கையும் மக்களிடம் தனக்கு இருக்கும் அபிமானத்தையும் வைத்து கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரும் பயங்கரமாக ஆக்டிவ் அரசியலில் இருந்தபோது தைரியமாக தேமுதிக கட்சியை ஆரம்பித்து முதல் சட்டப்பேரவை தேர்தலையே கூட்டணி இல்லாமல் தனித்து சந்தித்து தனக்கென வாக்கு வங்கி இருப்பதை உணர்த்தினார். அதனையடுத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடன் விஜயகாந்த் கூட்டணி வைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

அரசியலில் வீழ்ந்த கேப்டன்: விஜயகாந்த்தும் ஜெவுடன் கூட்டணி வைத்து அந்தத் தேர்தலை சந்தித்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். அந்த சமயத்தில் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே வாக்குவாதம் சட்டப்பேரவையிலேயே நடந்தது. உடனடியாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் பலரும் அக்கட்சியிலிருந்து விலக; விஜயகாந்த்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போதிருந்து அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனை அவரது மகனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
உயிரிழந்த விஜயகாந்த்: உடல்நலம் சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டார். இருந்தாலும் பழையபடி அவரால் ஆக்டிவ்வாக இருக்க முடியவில்லை. எனவே பரபர அரசியலிலிருந்தும் கொஞ்சம் ஒதுங்கி இளைப்பாற ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ரஜினியின் ரியாக்ஷன்: இந்நிலையில் விஜயகாந்த் இறப்பு செய்தியை கேட்டதும் ரஜினியின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பது குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியிருக்கிறார். அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சினிமாவில் விஜயகாந்த்துக்கு அடுத்ததாக எனக்கு ரஜினியைத்தான் பிடிக்கும். விஜயகாந்த் இறந்தபோது ரஜினிகாந்த் வெளியூரில் ஷூட்டிங்கில் இருந்தார். அவரது பி.ஏ எனக்குதான் ஃபோன் செய்தார்.
அவர் என்னிடம், 'விஜயகாந்த் இறந்துவிட்டதாக சொல்கிறார்களே அது உண்மைதானா?' என கேட்டார். அப்படி அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே ரஜினிகாந்த் ஃபோனை வாங்கி, 'கேப்டன் இறந்துவிட்டதாக சொல்கிறார்களே உண்மைதானா?' என கேட்டார். நான் ஆமாம் சார் என்றேன். உடனே அவர் ஷாக்காகி, இறுதி காரியங்கள் எல்லாம் எப்போது எங்கே செய்கிறார்கள் என கேட்க; இப்போது தெரியவில்லை சார் பிற்பகல் 1.30 மணிக்குத்தான் தெரியும் என சொன்னேன். சரி என்று ஃபோனை வைத்தவர்; மீண்டும் ஷார்ப்பாக 1.30 மணிக்கு ஃபோன் செய்து கேட்டார். அப்போதும் முடிவாகவில்லை; இரவு தெரியும் என்று சொன்னேன். சரி என்று வைத்தவர் இரவும் ஃபோன் செய்து கேட்டு தெரிந்துகொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











