நன்றாக ஸ்டைல் செய்கிறேனா?.. எனக்கே தெரியவில்லை.. ரஜினியே இப்படி சொல்லிட்டாரே
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக கூலி படமும், ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகவிருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் மீதும் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் கொடுத்த பழைய பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் என்ற பெயருக்கு விளக்கம் கேட்டாலே ஸ்டைல்தான். அவர் செய்த ஸ்டைலும், அவருக்கு இருந்த திறமையும்தான் அவரை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. யாராலும் இன்றுவரை அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலியை அசைத்து பர்க்க முடியவில்லை. ரஜினியின் ஒரு படம் தோல்வியடைந்தால் பலரும் சொல்வது, 'இனி ரஜினிகாந்த் அவ்வளவுதான். சகாப்தம் முடிந்தது' என்றுதான் சொல்வார்கள்.
யானை இல்லை குதிரை: பாபா படம் தோல்வியடைந்தபோதுகூட அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் அடுத்த படமான சந்திரமுகி படம் மெகா ஹிட்டானது. அப்போது அவர், 'நான் யானை இல்லை குதிரை. விழுந்தா டக்குனு எழுந்திடுவேன்' என்று பஞ்ச் பேசி அசத்தினார். அந்த பஞ்ச்படிதான் தர்பார், அண்ணாத்த தோல்வியை சந்தித்த பிறகு ஜெயிலர் படத்தில் மெகா ஹிட்டை கொடுத்தார். அந்தப் படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது.
ரஜினியின் ஸ்பெஷல்: ரஜினிகாந்த்தின் ஸ்பெஷல் என்றாலே அவரது ஸ்டைல், வேகமான நடை, பாவனைதான். பாட்ஷா படத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் தங்கள் அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்தபோது, 'அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி வேகத்துக்கு எங்களால் நடக்க முடியவில்லை' என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. அதுமட்டுமின்றி இப்போது 74 வயது ஆனாலும் அதே வேகம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் அனைவரும் ஆச்சரியத்தில்தான் இருக்கிறார்கள்.

ஸ்டைல் செய்றேனா?: எந்த நடிகர் வந்தாலும் ரஜினியின் ஸ்டைலை ஃபாலோ செய்வதே அதிகம். அந்த அளவுக்கு ரஜினியின் ஸ்டைல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு சில வருடங்கள் அளித்த பேட்டியில், "நான் ஸ்டைல் செய்கிறேனா?.. நான் ஸ்டைல் செய்கிறேன் என்று உண்மையிலேயே எனக்கு தெரியாது.
பாலசந்தர் சொன்ன அட்வைஸ்: ஒருமுறை பாலசந்தர் என்னை அழைத்து, 'மூன்று படங்கள் முடித்துவிட்டாய். உன்னுடைய வேகமும், இந்த ஸ்டைலும்தான் உனது ப்ளஸ். இனி வருபவர்கள் எல்லாம் இந்த ஸ்டைலையும், வேகத்தையும் மாற்ற சொல்வார்கள். ஆனால் அதை நீ எந்தக் காலத்திலும் மாற்றிவிடாதே. அதுதான் உன்னுடைய் ப்ளஸ். இதைத்தான் யாரும் செய்யவில்லை என கூறினார். அதிலிருந்து இப்படியே தொடர்ந்துவிட்டது" என்றார். ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக கூலி, ஜெயிலர் 2 ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











