வருவது BMW காரில்.. சாப்பிடுவது ஸ்டார் ஹோட்டலில்..இதுல நான் எங்க சிம்பிள்..போட்டுடைத்த ரஜினிகாந்த்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் இந்த மாதிரியான கதையில் நடித்ததற்காகவே ரஜினிகாந்த்துக்கு பாராட்டு தெரிவிக்கலாம் என்று கூறினார்கள் ரசிகர்கள். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவரும் அவர் டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்ற ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்தார். அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து ட்ரோலுக்கும் உள்ளானது. இதன் காரணமாக அவரது நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் உணர்த்தியது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 700 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது.

வேட்டையன் பராக்: அந்தப் படத்தை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வழக்கம்போல் ரஜினிகாந்த்தின் நடிப்பு அவ்வளவு எனர்ஜியாக இருந்தது. அதனை பார்த்த ரசிகர்களோ இவருக்கு வயது ஆகிறதா இல்லையா என்று சந்தேகப்பட்டனர். அந்த அளவுக்கு அவர் நடிப்பில் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி: தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பலர் நடிக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கிறார் என்றும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
சிம்பிள் ரஜினி: ரஜினிகாந்த்தை பொறுத்தவரை அவரது நடிப்பு, ஸ்டைலுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு அவரது சிம்ப்ளிசிட்டிக்கும் இருக்கிறார்கள். அவருடன் நடித்த அனைவருமே அவரது அந்த குணத்தை சிலாகித்து பேசுவார்கள். ரஜினிகாந்த் அந்த குணத்தை இழக்காமல் இருப்பதற்கு அவர் தான் பட்ட கஷ்டத்தையும், தன்னை வளர்த்துவிட்டவர்களையும் எந்தக் காலத்திலும் மறக்கவில்லை என்பதுதான் காரணம். அவரது அந்த உயரிய குணம் பலருக்கு இல்லை என்பதுதான் எதார்த்தம்.
ரஜினியின் பேட்டி: ஆனால் ரஜினியோ அந்த சிம்ப்ளிசிட்டி குறித்து வேறு மாதிரியான கருத்தை தெரிவித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த ஒரு பேட்டியில் தொகுப்பாளினி அவரிடம் சிம்பிளாக இருப்பது பற்றி பேசினார். அப்போது இடைமறித்த ரஜினிகாந்த், 'ஏங்க நான் வருவது BMW காரில். இருப்பதோ போயஸ் கார்டன் வீட்டில். சாப்பிடுவதோ 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டல்களில். இவ்வளவு செய்யும் நான் எங்கே சிம்பிளாக இருக்கிறேன். எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள். நான் போட்டிருக்கும் உடையை வைத்தா. உடையில் சிம்ப்ளிசிட்டி இல்லை' என்று ஒரே போடாக போட்டார். அதனைப் பார்த்த ரசிகர்களோ ரஜினிகாந்த் இப்படி ஓபனாக பேசுகிறாரே அதுதான் சூப்பர் ஸ்டார் என்று கூறி அந்த வீடியோவை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











