அசந்து தூங்குன கேப்புல மொட்டையை போட்டுட்டாங்களே.. ரஜினி வாழ்க்கையில் இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: ரஜினிகாந்த் இந்திய திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர். 74 வயதிலும் மும்முரமாக உழைத்துவரும் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் அவர் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு தகவல் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினியின் பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸாகி சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்தார். அதில் அவருடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2: கூலி படத்தில் நடித்து முடித்த கையோடு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படங்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. கண்டிப்பாக வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெறும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஜெயிலர் 2வில் பாலகிருஷ்ணாவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியம்தான்: ரஜினிக்கு இப்போது 74 வயது ஆகிறது. இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறாரே என்று திரைத்துறையினர் ஆச்சரியம்தான் பட்டிருக்கிறார்கள். அவரது இந்த சுறுசுறுப்பும் அவருக்கு பலரும் ரசிகர்களாக இருப்பது காரணம் என்பது குறிப்பிடத்தகக்து. அதேபோல் அவரது பல ஓபன் ஸ்டேட்மெண்ட்டுகளும் அவருக்கு ஆதரவையும், சர்ச்சையையும் பெற்று கொடுத்திருக்கிறது என்பது கடந்த கால வரலாறு.
சமீபத்தில்கூட: கடந்த வருடம்கூட திமுக மேடை ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்துக்கொண்டே அமைச்சர்கள் எல்லாம் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில்தான் வேள்பாரி வெற்றி பெரு விழாவில் அப்படி பேசியது குறித்து விளக்கமளித்திருந்தார். அது பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இந்தப் புத்தக விழாவுக்கு என்னை ஏன் அழைத்தார்கள் என தெரியவில்லை என்று விளையாட்டாகவும் பேசியது பலத்த ரெஸ்பான்ஸை பெற்றது நினைவுகூரத்தக்கது.
ரஜினியின் ட்ரெண்டிங் வீடியோ: இந்நிலையில் ரஜினிகாந்த் விழா ஒன்றில் காமெடியாக பேசிய பழைய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. அந்த மேடையில் பேசிய அவர், "நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது பலரும் என்னிடம் ஏன் மொட்டை அடித்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஒருமுறை அமெரிக்காவுக்கு போயிருந்தேன். அங்கு ஹேர் ஸ்டைல் பற்றிய விளம்பரம் ஒன்றை பார்த்தேன். சரி ஹேர் ஸ்டைலை மாற்றலாமே என்று நினைத்துக்கொண்டு அங்கே போனேன்.
மொட்டை அடித்துவிட்டார்கள்: அங்கு சென்றதும் தலைக்கு மசாஜ் எல்லாம் செய்வோம் என்று சொல்லி செய்தார்கள். நான் அப்படியே தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்தால் முழுதாக மொட்டை அடித்திருந்தார்கள். அதுமட்டுமின்றி சார் இது உங்களுக்கு சூப்பராக இருக்கிறது என்று சொன்னார்கள். வேறு வழியில்லாமல் வந்துவிட்டேன். 120 அமெரிக்க டாலர்கள் கொடுத்தேன்.கிட்டத்தட்ட நம்ம ஊர் பணத்துக்கு 4,000 ரூபாய் கொடுத்து மொட்டை அடித்தேன். ஆனால் தமிழர்கள் யாரும் எனக்கு மொட்டை அடிக்கமாட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











