90களில் ரஜினி, கமலை விடவும் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்... ஒரு கோடி வாங்கிய முதல் ஹீரோ!

சென்னை: ரஜினி, கமல் இருவருமே 1990களில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.

டாப் ஹீரோக்களாக மட்டுமில்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாகவும் காணப்படுகின்றனர்.

ஆனால், 1990களில் ரஜினி, கமல் இருவரை விடவும் அதிகம் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகர்கள் குறித்து பலருக்கும் தெரியாது.

ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களை விட ராமராஜன், ராஜ்கிரண் தான் அதிக சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

 லட்சங்களில் சம்பளம்

லட்சங்களில் சம்பளம்

1990களில் ரஜினி, கமல், விஜயகாந்த் மூவரும் தான் டாப் ஹீரோக்களாக ஜொலித்தனர். அவர்களுடன் சத்யராஜ், கார்த்திக், பிரபு, முரளி, ராம்கி, ரகுமான் போன்ற மினிமம் கியாரண்டி நடிகர்களும் ஏராளமான படங்களில் நடித்து வந்தனர். இதில், முரளி, ராம்கி, ரகுமான் போன்றோர் ஒரு படத்துக்கு 4 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக கார்த்திக் 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார்.

 பிரபு, சத்யராஜ்

பிரபு, சத்யராஜ்

இவர்களுக்கு அடுத்த இடத்தில் பிரபு, சத்யராஜ் இருவரும் பீக்கில் இருந்துள்ளனர். ஆக்‌ஷன் கெட்டப், கிராமத்து பாத்திரங்கள் என வெரைட்டியாக நடித்து வந்த பிரபு ஒரு படத்துக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். அதேபோல், சத்யராஜ் ஒரு படத்தில் நடிக்க 20 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். வில்லனாக இருந்து ஹீரோவான சத்யராஜ் ஆரம்பத்தில் ரொம்பவே குறைவான சம்பளத்தில் தான் நடித்து வந்துள்ளார்.

 விஜயகாந்த் சம்பளம்

விஜயகாந்த் சம்பளம்

சினிமாவில் ரொம்பவே கஷ்டப்பட்டு முன்னணி ஹீரோவாக வலம் வந்ததில் கேப்டன் விஜயகாந்த்தும் ஒருவர். போலீஸ் யூனிஃபார்மில் ஆக்‌ஷன் ஜானர் படங்களில் மட்டுமே அதிகம் நடித்து வந்த விஜயகாந்த், ஒரு படத்துக்காக 35 முதல் 45 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. போலீஸ் ஸ்டோரி படங்களை இயக்கவரும் இயக்குநர்களின் முதல் தேர்வாக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரஜினி, கமல்

ரஜினி, கமல்

இந்த வரிசையில் ரஜினியும் கமலும் மற்ற நடிகர்களை விட முன்னணியில் இருந்தாலும், அவர்களை விடவும் இரண்டு நட்சத்திரங்கள் அதிக சம்பளம் வாங்கியுள்ளனர். கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்க 40 முதல் 50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு படத்திற்காக 60 முதல் 70 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி, கமல் இருவருமே இன்று 100 கோடிகளுக்கும் மேல் சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 ஒருகோடி சம்பளம்

ஒருகோடி சம்பளம்

ரஜினிகாந்த், கமல்ஹாசனை விட அதிக சம்பளம் வாங்கியதில், ராமராஜனும் ராஜ்கிரணும் தான் டாப்பில் உள்ளனர். கரகாட்டகாரன் படம் தொடர்ந்து ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது. அதனால் அப்போது ராமராஜனுக்கு 80 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாம். அதேபோல், என் ராசாவின் மனசிலே உட்பட தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்த ராஜ்கிரன் தான் 90களில் ஒரு கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. மாணிக்கம் படத்திற்காக ராஜ்கிரண் வாங்கிய சம்பளம் ஒரு கோடியாம். அதன்பின்பு ராமராஜன், ரஜ்கிரன் இருவரும் ஃபீல்ட் அவுட் ஆக, ரஜினியும் கமலும் மாஸ் காட்ட தொடங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X