என்னென்னம்மோ செஞ்சு நடிக்கிறேன்.. ஆனா அவர் அசால்ட்டா தட்டிடுறாரே.. கமல் ஹாசனை புலம்ப வைத்த ராமராஜன்

சென்னை: கோலிவுட்டில் 80களில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் ராமராஜன். அவரது வளர்ச்சி அப்போது பீக்கில் இருந்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரின் வயிற்றில் புளி கரைத்தது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அவர் தனது படங்களை ஹிட் படங்களாக கொடுத்தார். இடையில் சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் ராமராஜனை நினைத்து கமல்ஹாசன் புலம்பிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய இரண்டு பேரும் எழுதியிருக்கும் அத்தியாயத்தை எப்போது அழிக்க முடியாது. அவர்கள்தான் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஐகான்களாக இருக்கிறார்கள். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அவர்களை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக 80கள், 90களில் அவர்கள் புகழின் உச்சியில் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் போட்டியாக பலர் வந்தாலும் சிலர் மட்டும்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் ராமராஜன்.

Ramarajan Shares His Memories with Kamal Haasan Here are the details

மெகா ஹிட்: ராமராஜனின் திரையுலக வாழ்க்கையை புரட்டிப்போட்ட படம் என்றால் அது கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கியிருந்த அந்தப் படம் தில்லானா மோகனாம்பாள் ஜானரில்தான் உருவாகியிருந்தது. ஆனால் அதில் விஷேஷம் என்னவென்றால் இதில் எடுத்துக்கொண்ட மையக்கரு கரகாட்டம். கிராமங்கள் பக்கம் கொண்டாடப்படும் கரகாட்டத்தை கதையின் கருவாக வைத்து; ஹீரோ, ஹீரோயினை கரகாட்ட கலைஞர்களாக காண்பித்திருந்ததால் படம் மெகா ஹிட்டானது.

ராமராஜனின் ராஜ்ஜியம்: அந்தப் படத்திலிருந்து ராமராஜனின் ராஜ்ஜியம் தமிழ் சினிமாவில் வளர்ந்தது. கரகாட்டக்கரன் கொடுத்த மவுசால் ராமராஜனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்தப் படங்களும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டாகத்தான் அமைந்தன. முக்கியமாக கிராமங்கள் பக்கம் ராமராஜனுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைக் கண்டு ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோர் எல்லாம் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள் என்பது உண்மை.

ராமராஜனின் ரீ என்ட்ரி: சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், 'ராமராஜனின் வளர்ச்சியை பார்த்து ரஜினிகாந்த் அஞ்சினார்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தபோதே நளினியை காதலித்து திருமணம் செய்து பிறகு பிரிந்தார் ராமராஜன். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்துவந்த ராமராஜன் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இப்போது சாமானியன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது.

புலம்பிய கமல் ஹாசன்: இந்நிலையில் ராமராஜனை பற்றி கமல் ஹாசன் புலம்பிய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது கரகாட்டக்காரனால் ராமராஜனுக்கு கிடைத்த மவுசை பார்த்த கமல் ஹாசன், 'நான் காலை எல்லாம் மடக்கி என்னென்னம்மோ செய்து நடிக்கிறேன். ஆனா ராமராஜனோ தலையில் ஈசியா ஒரு கரகத்தை வைத்து ஆடிட்டு போயிட்டாரே' என்றாராம். அதேபோல் ஒரு நாள் கமல் ஹாசனை சந்திக்க ராமராஜன் சென்றிருந்தாராம்.

இதென்ன விக்கா: அப்போது ராமராஜனின் ஹேர் ஸ்டைலை பார்த்த கமல் ஹாசன், 'என்ன ராமராஜன் இது ஒரிஜினல் ஹேர் ஸ்டைலா இல்லை விக்கா?' என்று கேட்டாராம். அதற்கு ராமராஜன், 'இது ஒரிஜினல்தான் சார்' என்று சொல்ல, 'நீ ஒரு ஆள் மட்டும்தான்யா உண்மையான ஹேர் ஸ்டைலை கூட விக் மாதிரியே வெச்சிருக்க' என்று கூற; அதற்கு ராமராஜனோ, 'வேணும்னு வைக்கல சார். என் சின்ன வயதிலிருந்தே இப்படித்தான் எனது ஹேர் ஸ்டைல் இருக்கு' என சொல்லிவிட்டு வந்தாராம். இதனை ராமராஜனே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X