ரஜினிக்கு என்னை பார்த்து பயம்.. ஆனால் ஒன்று.. பல வருடங்கள் கழித்து சீக்ரெட் உடைத்த ராமராஜன்
சென்னை: ராமராஜன் ஒருகாலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். ஆனால் நளினியும், ராமராஜனும் விவாகரத்து செய்து பிரிந்தனர். சூழல் இப்படி இருக்க ராமராஜன் சாமானியன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில் ரஜினி குறித்து ராமராஜன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டில் ராமராஜன் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்தவர். கரகாட்டக்காரன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார். மொத்தமே அவர் பீக்கில் இருந்தது என்றால் ஐந்து வருடங்களுக்குள்தான் இருக்கும். ஆனால் அந்த காலத்தில் அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. முக்கியமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு கடுமையான போட்டியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் டூ விவகாரத்து: அந்த சமயத்தில் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திடீரென இருவரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் ஜோசியம்தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் நல்லது இல்லை என்று ஜோதிடக்காரர் ஒருவர் சொன்னதாகவும்; அதனாலதான் அவர்களது விவாகரத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.
ராமராஜன் பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து ராமராஜன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரஜினிக்கு என்னைப் பார்த்து பொறாமை, பயம் என்றெல்லாம் சொன்னார்கள். அதற்கு இப்போது நான் விளக்கம் கொடுக்கிறேன். ஒரு வகுப்பில் ஒரு மாணவன் முதல் மார்க் வாங்குவான். இன்னொருவன் இரண்டாவது, இன்னொருவன் மூன்றாவது மார்க் வாங்குவான். இதில் இரண்டாவது மார்க் வாங்கும் ஒருவன் முதல் மார்க் வாங்கினாலோ அல்லது அந்த சூழல் அமைந்தாலோ ஏற்கனவே முதல் மார்க் வாங்கிய மாணவனுக்கு பயம் வரும்.
ஏன் பயம்: ஏனென்றால் நீ ஏன் முதல் மார்க் வாங்கவில்லை என்று அவனது அம்மா, அப்பா அந்த மாணவனை அடிப்பார்கள் அல்லது திட்டுவார்கள். உண்மையில் அது போட்டியும் இல்லை, பொறாமையும் இல்லை. மாணவர்களுக்கிடையே இருக்கக்கூடிய சூழல் அதுபோன்று அமையும் அவ்வளவுதான். அதுதான் எனக்கும் ரஜினிக்கும் இடையே நடந்தது. உண்மையில் என்னை பார்த்து ரஜினிகாந்த் பயந்திருக்கலாம். ஏனெனில் என்னுடைய படத்துக்கு பெண்கள் கூட்டம் வந்து படம் பார்க்கும்.
அவர் ஆச்சரியம்தான்: ஆனால் அது ஒரு காலகட்டம்வரைக்கும்தான். அதாவது 80களில் மட்டும்தான் எனக்கான ரேஞ்ச் அப்படி இருந்தது. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. தம்பி ராமையாவின் மகன் திரும்னத்துக்கு சென்றிருந்தேன். அப்போது ரஜினியை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பேரும் அவ்வலவு பேசிக்கொண்டோம். அவர் உண்மையான லெஜண்ட். நீங்கள் எல்லாம் என்னைப் பற்றி சொல்கிறீர்கள். ரஜினியோ இந்த வயதிலும் விறுவிறுவென நடக்கிறார். அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.


Click it and Unblock the Notifications











