சரோஜா தேவியிடமே வாலாட்டிய வடிவேலு.. ரொம்ப டென்ஷன் ஆகிட்டாராம்.. இது எப்போ நடந்தது தெரியுமா?

சென்னை: மாமன்னன் படத்திற்கு பிறகு நடிகர் வடிவேலுவை கடந்த ஆண்டு ரசிகர்கள் அதிக படங்களில் பார்த்து விடுவோம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது ரசிகர்களை ரொம்பவே வேதனையில் ஆழ்த்திவிட்டது.

பகத் பாசில் உடன் இணைந்து மாரீசன் எனும் ஒரு படத்தில் மட்டுமே வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு அந்த படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் வடிவேலு நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

saroja devi vadivelu throwback

ஆதவன் படத்தில் நடிக்கும் போது சரோஜா தேவியையே வைகைப்புயல் வடிவேலு டென்ஷன் ஆக்கிவிட்டார் என பேட்டி ஒன்றில் ரமேஷ் கண்ணா ஓபனாக பேசியிருப்பது தீயாக பரவி வருகிறது. அப்படி வடிவேலு என்ன சொன்னார். அதற்கு சரோஜா தேவி என்ன எதிர்வினை ஆற்றினார் என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

கன்னடத்துப் பைங்கிளி: கர்நாடகாவில் இருந்து லேட்டஸ்ட்டாக ராஷ்மிகா மந்தனா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றனர். ஆனால், அந்த காலத்திலேயே எம்ஜிஆர், சிவாஜி படங்களில் டாப் ஹீரோயினாக வலம் வந்து கன்னடத்துப் பைங்கிளி என பெயர் எடுத்தவர் தான் சரோஜா தேவி. அன்பே வா, எங்கள் வீட்டுப் பிள்ளை, படகோட்டி, பாலும் பழமும், ஆலயமணி உள்ளிட்ட படங்களை எல்லாம் ரசிகர்கள் எந்தக் காலத்திலும் மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சரோஜா தேவிக்கு தற்போது 86 வயதாகிறது. கடைசியாக அவர் தமிழில் சூர்யா, நயன்தாரா நடித்த ஆதவன் படத்தில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடித்திருந்தார்.

சரோஜா தேவியை டென்ஷனாக்கிய வடிவேலு: ஆதவன் படத்தில் காமெடியனாக நடித்த வடிவேலு, இயக்குநர் எழுதாத வசனத்தை சரோஜா தேவியை பார்த்து தனது இஷ்டத்துக்கு சொல்லிவிட்டார். "நீ அப்படியே மேல போ.. ஒரு அம்மா நிறைய பவுடர் போட்டுட்டு படுத்துட்டு இருக்கும்" என்கிற வசனத்தை வடிவேலு பேசியதை பார்த்து கடுப்பாகி விட்டாராம் சரோஜா தேவி. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ஆதவன் படத்தில் நடித்த சரோஜா தேவி, அவர் அந்த படத்தில் நடிக்க காரணமான ரமேஷ் கண்ணாவிடம் போன் செய்து, நான் உங்ககிட்ட நடிக்க சான்ஸ் கேட்டேனா? ஏன் இப்படி என்னை அசிங்கப்படுத்துறீங்க, நான் ஒன்றும் மனோரமா போல காமெடி நடிகை கிடையாது எனக் கூறினார். ஆனால், அந்த பிரச்சனையை அப்படியே எப்படியோ பேசி சமாளித்துவிட்டோம் என ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.

saroja devi vadivelu throwback

நடிப்பதில்லை: ஏற்கனவே விஜய்யின் ஒன்ஸ் மோர் படத்தில் சிவாஜி கணேசன் நடித்த நிலையில், சரோஜா தேவி வயதான காலத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், சூர்யாவின் ஆதவன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவர் படங்களில் நடிப்பதையே விட்டுவிட்டார். கடந்த 2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான நாதஸ்வரபொம்மா படத்தில் சரோஜா தேவியாகவே கேமியோ ரோலில் அவர் நடித்தது தான் கடைசி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்து நடிகர்கள் எல்லாம் மரியாதையை ரொம்பவே எதிர்பார்ப்பார்கள் என்றும் நம்ம வடிவேலு அவர் ஸ்டைலில் கலாய்த்தது சரோஜா தேவியை காயப்படுத்தி விட்டது எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X