த்ரிஷாவுக்கு ஃபீலிங் இல்லை.. எல்லாம் டிராமா.. Mood சேஞ்ச் பண்ணாதனு சொல்லுவாங்க.. மூத்த நடிகை ஓபன்!
சென்னை: நடிகை த்ரிஷா, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். மூத்த நடிகையும் கூட. இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் சூர்யாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள படமான கருப்பு படம் தான். இந்த படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகி வருகிறார் த்ரிஷா.
த்ரிஷாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்ஸ்டாகிராமில் ஏதாவது பதிவிட்டாலே அதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்களும் இணையவாசிகளும். நடிகர் விஜய் உடன் அவர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் அவர் குறித்த பேச்சுக்களும் கிசுகிசுக்களும் அதிகரித்தது. இப்படி இருக்கையில் நடிகை த்ரிஷா குறித்த பல அப்டேட்கள், சுவாரஸ்யமான தகவல்கள், கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் என பலவும் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஒரு பழைய வீடியோவை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதாவது, விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக இருவரும் சென்ற போது, ரம்யா கிருஷ்ணன் நடிகை த்ரிஷா குறித்து சுவாரஸ்யமான தகவல்களை கூறுகிறார்.
த்ரிஷா - ரம்யா கிருஷ்ணன்: அதாவது, " த்ரிஷா ரொம்பவும் ஜாலியானவர். எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார். அதேபோல் சீரியஸாக அழுது கொண்டேவும் பேசுவார். அதைப் பார்த்து எனக்கு சிரிப்பாக இருக்கும் என்று கூறுகிறார். அதற்கு த்ரிஷாவோ நான் சீரியஸாக மிகவும் ஃபீல் செய்து பேசிக்கொண்டு இருப்பேன் அப்போது ரம்யா கிருஷ்ணன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு இருப்பார் என்று கூறுகிறார்.

ஃபீலிங் எல்லாம் இல்லை: இதற்கு ரம்யா கிருஷ்ணனோ, த்ரிஷாவுக்கு ஃபீலிங் எல்லாம் எதுவும் கிடையாது, எல்லாம் பொய், இதுல Mood சேஞ்ச் பண்ணாதனு சொல்லுவாங்க என்று சொல்லிச் சொல்லி காலாய்த்து சிரிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த பழைய வீடியோவை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையவாசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications