Ramya Krishnan: “கமலுடன் நடிக்க வேற வழி தெரியல..” பஞ்சதந்திரம் பிளாஷ்பேக் சொன்ன ரம்யாகிருஷ்ணன்
சென்னை: ரஜினியின் ஜெயிலர் படத்தில் அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
படையப்பா படத்திற்குப் பின்னர் ஜெயிலரில் ரஜினியுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
அப்போது பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் நடித்தது குறித்தும் மனம் திறந்துள்ளார்.
கமலுடன் நடிக்க இதுதான் சான்ஸ்: தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். பேர் சொல்லும் பிள்ளை, புதுப்பாட்டு, சிகரம், கேப்டன் பிரபாகரன், வானமே எல்லை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் பெரிய அளவில் ரீச் ஆகாத ரம்யா கிருஷ்ணனுக்கு, படையப்பா பெரிய ஜாக்பாட் படமாக அமைந்தது.
நீலம்பரி என்ற கேரக்டரில் நடித்து கம்பேக் கொடுத்த ரம்யா கிருஷ்ணன், அதன்பின்னர் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்து இன்னும் மாஸ் காட்டினார். இந்நிலையில் படையப்பாவில் ரஜினியை ஒருதலையாக காதலித்து வில்லியாக மாறிய ரம்யா கிருஷ்ணன், ஜெயிலரில் அவரது மனைவியாக நடித்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசன் குறித்தும் மனம் திறந்தார். கமல் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய பஞ்சதந்திரம் 2002ம் ஆண்டு வெளியானது. காமெடி தர்பாராக உருவான இந்தப் படத்தில் மேகி என்ற கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

படையப்பாவில் நீலாம்பரியாக மிரள வைத்த ரம்யா கிருஷ்ணன், பஞ்சதந்திரம் படத்தில் மேகியாக வந்து கிறங்கடித்தார். அதேபோல் 'வை ராஜா வை' பாடலிலும் ரம்யா கிருஷ்ணனின் ஆட்டம் அனல் பறந்தது. இந்தப் படத்தில் நடித்தது குறித்து பேசிய ரம்யா கிருஷ்ணன், கமல் சாருடன் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை இருந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், பஞ்சதந்திரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், இதனைவிட்டால் இன்னொரு சான்ஸ் கிடைக்காது என ஓக்கே சொல்லிவிட்டதாக ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதனால் பஞ்சதந்திரம் மேகி கேரக்டர் எப்படி இருந்தாலும் அதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன், அதனால் தான் நடித்தேன் என்றும் ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











