சிவகார்த்திகேயனுக்காக பெயரை மாற்றிக்கொள்கிறேன் என்று சொன்னேன்.. ரம்யா கிருஷ்ணன் ஷேரிங்ஸ்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதுவரை 300 கோடி ரூபாய்க்கும் மேல் அந்தப் படம் வசூல் செய்திருக்கிறது. மேலும் 25 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக படத்தை தயாரித்திருக்கும் ராஜ்கமல் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் எஸ்கேவும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் ரம்யா கிருஷ்ணன் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் களமிறங்கி வெள்ளித்திரைக்கு வந்தவர். தனுஷின் துணையோடு அவர் சினிமாவுக்குள் காலடி வைத்தாலும் தனது திறமையால் இன்று வளர்ந்து உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தபோது பலரும் எஸ்கேவின் சகாப்தம் முடிந்ததாக கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி வரிசையாக ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன்.

வரிசையாக ஹிட்டுகள்: அதன்படி அவர் நடித்த மாவீரன், அயலான், அமரன் ஆகிய மூன்று படங்களும் வரிசையாக ஹிட்டடித்தன. முக்கியமாக அமரன் படம் சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் பெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. அதில் சிவாவின் நடிப்பை பார்த்த பலரும் இனி சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கை அமரனுக்கு முன், அமரனுக்கு பின் என்றுதான் பார்க்கப்படுமென கூறிவருகிறார்கள். அதுமட்டுமின்றி சிவா இப்படி ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆவார் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் கூறுகிறார்கள்.
வசூல் சாதனை: படம் விமர்சன ரீதியாக ஒருபக்கம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதேபோல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது. இதுவரை 300 கோடி ரூபாய்க்கும் மேல் உலக அளவில் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டரில் 100 கோடி க்ளப்பில் இணைந்த சிவா அமரனில் 300 கோடி க்ளப்பில் சேர்ந்துவிட்டார். அதேபோல் விஜய்யும் சினிமாவை விட்டு ஒதுங்குவதால் அவரது இடத்தில் அடுத்து சிவகார்த்திகேயனே இருப்பார் என்று பலரும் சொல்கிறார்கள்.
அடுத்த படங்கள்: அமரன் படத்தை முடித்திருக்கும் எஸ்கே அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது. மேலும் சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு படத்திலும் நடிக்கிறார். அந்தப் படத்தில் சிவாவுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இவை தவிர்த்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார் அவர்.
ரம்யா கிருஷ்ணன் பேட்டி: இந்நிலையில் சிவகார்த்திகேயன் பற்றி ரம்யா கிருஷ்ணன் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் பேசிய அவர், "ஜோடி நிகழ்ச்சியில் நிறைய டாஸ்க்கை நான் சிவகார்த்திகேயனுக்குத்தான் கொடுத்திருக்கிறேன். ஏனெனில் அவர் ரொம்ப திறமையானவர். அவர் மட்டும் ஹீரோவாகவில்லை என்றால் நான் எனது பெயரை மாற்றிக்கொள்கிறேன் என்றுகூட சொல்லியிருந்தேன். அவர் ஹீரோவாகிவிட்டார். அவரது வெற்றி என்பது ஒரு இமாலய வெற்றி. அதுமட்டுமின்றி அவர் வெற்றியடைந்தது பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











