ரஜினிகாந்த்தை இப்போது பார்த்தாலும்.. வீடியோ விடணும்.. ரம்யா கிருஷ்ணன் ஓபனா பேசிட்டாங்களே ப்பா

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் இந்த மாதிரியான கதையில் நடித்ததற்காகவே ரஜினிகாந்த்துக்கு பாராட்டு தெரிவிக்கலாம் என்று கூறினார்கள் ரசிகர்கள். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருக்கும் அவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார்.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்ற ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்தார். அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து ட்ரோலுக்கும் உள்ளானது. இதன் காரணமாக அவரது நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் உணர்த்தியது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 700 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது.

Ramya Krishnan Throwback Interview About Rajinikanth Here are details

வேட்டையன் பராக்: அந்தப் படத்தை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வழக்கம்போல் ரஜினிகாந்த்தின் நடிப்பு அவ்வளவு எனர்ஜியாக இருந்தது. அதனை பார்த்த ரசிகர்களோ இவருக்கு வயது ஆகிறதா இல்லையா என்று சந்தேகப்பட்டனர். அந்த அளவுக்கு அவர் நடிப்பில் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி: தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பலர் நடிக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தப் படத்தை முடித்திருக்கும் அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Ramya Krishnan Throwback Interview About Rajinikanth Here are details

சிம்ப்பிள் ரஜினி: ரஜினிகாந்த்தை பொறுத்தவரை அவரது நடிப்பு, ஸ்டைலுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு அவரது சிம்ப்ளிசிட்டிக்கும் இருக்கிறார்கள். அவருடன் நடித்த அனைவருமே அவரது அந்த குணத்தை சிலாகித்து பேசுவார்கள். ரஜினிகாந்த் அந்த குணத்தை இழக்காமல் இருப்பதற்கு அவர் தான் பட்ட கஷ்டத்தையும், தன்னை வளர்த்துவிட்டவர்களையும் எந்தக் காலத்திலும் மறக்கவில்லை என்பதுதான் காரணம். அவரது அந்த உயரிய குணம் பலருக்கு இல்லை என்பதுதான் எதார்த்தம்.

ரம்யா கிருஷ்ணன் பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து ரம்யா கிருஷ்ண கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் இப்போது பலருடன் பணியாற்றினாலும் ரஜினிகாந்த்தை இப்போது பார்த்தாலும் ஆச்சரியம்தான். அவர் ஷூட்டிங்கிற்கு வந்தபோது அவர் தயாராகும் விதம், மற்றவர்களிடம் பழகும் விதம், இயக்குநரை மதிக்கும் விதம், அவருடைய டெடிகேஷன் என அத்தனையையும் ஒரு மேக்கிங் வீடியோவாக எடுத்து அதனை வெளியிட வேண்டும். அந்த வீடியோவை தற்போது இருக்கும் இளம் நடிகர்கள், நடிகர்களாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், ஸ்டார் ஆக வேண்டுமென ஆசைப்படுபவர்கள் அத்தனை பேரும் பார்க்க வேண்டும்" என்றார். முன்னதாக ரஜினியும், ரம்யா கிருஷ்ணனும் இணைந்து படையப்பா, ஜெயிலர் படங்களில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X