மேக்கப் இல்லாமல் வர சொன்ன கமல்.. கேள்வி கேட்ட நடிகை... ஓபனா சொன்ன ராணி முகர்ஜி!
மும்பை: தமிழ் மற்றும் இந்தியிலும் ஒரே நத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹேராம்.
தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 2000, பிப்ரவரி 18 அன்று வெளியான 'ஹே ராம்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நடிகர் கமல் தயாரித்து, இயக்கி நடித்திருந்த இப்படத்தில் ஷாருக்கானும், கமலும் நண்பர்களாக நடித்திருந்தனர். இப்படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. நீ பார்த்த பார்வை பாடலை மறக்க முடியுமா?. அந்த பாட்டை பார்க்கும் போதெல்லாம் ராணி முகர்ஜியின் முகமே அனைவருக்கும் தோன்றும். ஹேராம் படத்தில் நடித்த அனுபவத்தை ராணி முகர்ஜி பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் காண்போம்.
தீர்க்கத்தரிசி: கமல் நடிப்பில் வெளியான பல படங்கள் காலத்தால் முன்பே கணித்தவை என்று கூறப்படுவதுண்டு. இந்த கருத்து பல படங்களுக்கு பொருந்துவதை காட்டிலும் ஹே ராம் படத்திற்கு பொருந்தும். தமிழ்ச் சமூகம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டிய வன்முறையை வெறும் செய்திகளாகவும் வரலாற்றுப் பாடங்களிலும் மட்டுமே அறிந்திருக்கிறோம். பொதுவாக, மதவாத வன்முறையும் தமிழ் மண் ணுக்கு அந்நியமாகவே இருந்து வருகிறது.

வன்முறை: இப்படத்தில் நண்பன் அஜ்மத்தின் இறப்பிற்கு பிறகு ஹீரோ மூளைச்சலவை செய்யப்படுகிறான். தனக்கு ஏற்பட்ட வேதனை பழிவாங்கும் உணர்வு எல்லாம் சேர்ந்து இஸ்லாமியர்களையும் காந்தியையும் வெறுக்க தொடங்குகிறான். இப்படிதான் கதை மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. துப்பாக்கியால் காந்தியை கொல்ல துணியும் ஒருவன் காந்தியை புரிந்து கொண்ட பின்பு, அகிம்சையை பின் தொடர்கிறார் கமல்.
ராணி முகர்ஜி: ஹேராம் படத்தில் கமலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடித்திருப்பார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராணி முகர்ஜி பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் மேக்கப்புடன் சென்றால் தான் இயக்குநர்கள் நடிக்க சொல்வார்கள். ஆனால், கமல் என்னிடம் தந்த வித்தியாசமான பதில் என்னை மிகவும் கவர்ந்தது என தெரிவித்துள்ளார்.
கமல் சொன்ன வார்த்தை: இதுவரை என் சினிமா கரியரில் யாரும் என்னை பார்த்து இப்படி சொன்னதில்லை. கமல் தான் முதன்முதலில் அப்படி சொன்னார். மேக்கப்புடன் நின்ற என்னை பார்த்து என்ன இப்படி வந்திருக்கீங்க மேக்கப் இல்லாமல் வாங்க என்று கூறினார். அதற்கு நான் உண்மையாகவா என்று கேட்டேன். ஏன் அப்படி கேட்கிறீர்கள் உண்மையை தான் சொல்கிறேன் என்றார். பின்னர், மேக்கப்பை முழுதாக அழிக்காமல், மேக்கப்பை கொஞ்சம் குறைத்து கொண்டு அவர் முன்பு நின்றேன்.
அபர்ணா: அதை பார்த்த கமல் மீண்டும் எந்தவித மேக்கப் இல்லாமல் முகத்தை சோப்பு போட்டு கழுவி விட்டு வாருங்கள் என்று சொன்னார். என்னால் நம்பமுடியவில்லை. நானும் கமல் கூறியதை போல் முகத்தை கழுவிவிட்டு அவர் முன்பு நின்றேன். அப்போது என்னை பார்த்து நீங்கள்தான் ஹேராம் மனைவி அபர்ணா என்று சொன்னார். அப்போது , மேக்கப் இல்லாமல் கூட கேமரா முன்பு நிற்க முடியும் என்பதை உணர்த்தியவர் கமல். கேமராக்களுக்கு மேக்கப்பை விட உண்மையான அழகு எந்த அளவுக்கு ஆச்சர்யத்தை அளிக்கும் என்பதை உணர்ந்துகொண்டேன் என ராணி முகர்ஜி தெரிவித்தார். தற்போது இதுகுறித்த செய்தி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











