ஆர்த்தி என்கூடவே இருக்காங்க.. அவங்க இல்லைனா இப்படி இருப்பேனா தெரியல?.. ரவி மோகன் ஓபனா சொல்லிருக்காரே

சென்னை: ரவி மோகனும் ஆர்த்தியும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவிருக்கிறார்கள். அவர்களது விவாகரத்து விஷயம்தான் கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டின் ஹெட்லைன்ஸாக இருந்தது. அதுமட்டுமின்றி இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி அறிக்கை வெளியிட்டும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ஆர்த்தி குறித்து நடிகர் ரவி மோகன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

ஆர்த்தியை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ரவி மோகன். முதலில் இந்தத் திருமணத்துக்கு ரவியின் தந்தையான மோகன் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் தலையிட்டு மோகனை சம்மதிக்க வைத்தார்கள். ரவிக்கும், ஆர்த்திக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு மகன்களில் ஒரு மகனான ஆரவ் ரவியுடன் சேர்ந்து டிக் டிக் டிக் திரைப்படத்த்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரிவை அறிவித்த ரவி: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக வலம் வந்த அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதெல்லாம் சீக்கிரமே காணாமல் போய்விடும் என்று எதிர்பார்த்த நேரத்தில்; ஆர்த்தியை தான் பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார் ரவி. அது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் தங்கள் இஷ்டத்துக்கு அந்த விவகாரத்தில் கதைகளை கட்ட ஆரம்பித்தார்கள். பிறகு அந்த விஷயம் கொஞ்சம் ஆறிப்போனது.

Ravi Mohan s Throwback Speech about Aarti Ravi Here are Details
Photo Credit:

மீண்டும் ஆரம்பித்த விவகாரம்: சூழல் இப்படி இருக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு தனது தோழி கெனிஷாவுடன் வந்தார் ரவி. அதனைப் பார்த்த ஆர்த்தியோ காட்டமாகவும், எமோஷனலாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு பிறகு ரவியும் தனது பங்குக்கு ஒரு அறிக்கை விட்டார். இப்படி இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்த சூழலில்; ஆர்த்தியின் தாயும், தயாரிப்பாளருமான சுஜாதாவும் தன் பங்குக்கு எமோஷனலாக ரவியிடம் கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டார்.

கடிவாளம் போட்ட நீதிமன்றம்: நாளொரு அறிக்கை அவர்களிடமிருந்து வந்துகொண்டிருந்த சூழலில்; ரவி ஏற்கனவே விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தார். அதுமட்டுமின்றி, இனி ரவி, ஆர்த்தி, சுஜாதா உள்ளிட்டோர் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டார். இதனால் அறிக்கை போர் ஒருவழியாக ஓய்ந்தது.

ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம்: ஆர்த்தி தரப்பிலிருந்து தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொண்டாலும்; விவாகரத்து வேண்டும் என்பதில் ரவி மோகன் மிக உறுதியாகவே இருந்தார். இனி வேலைக்கு ஆகாது என்பதை தெரிந்துகொண்ட ஆர்த்தி, 'தனக்கு மாதா மாதம் 40 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக ரவி மோகன் வழங்க வேண்டும்' என நீதிமன்றத்தில் கூறினார். இவ்வளவு பெரிய தொகை ஜீவனாம்சமா என்று வாயை பிளந்தார்கள் ரசிகர்கள்.

ரவியின் பேச்சு: எப்படியும் ஆர்த்தியும் ரவியும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறப்போவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் ஆர்த்தி குறித்தும் தனது மகன்கள் குறித்தும் ரவி மோகன் பேசிய பழைய வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அந்த விழாவில் பேசிய அவர், "என்னுடைய பிள்ளைகளுக்கு எனது முகத்தை பார்க்கும்போது அப்பா, அப்பா என்று அவ்வளவு ஆனந்தம். என்னை உண்மையாகவே ஒரு ஹீரோவாக பார்க்கிறார்கள். அதேபோல் என்னுடைய பேபி (ஆர்த்தி). ஒவ்வொரு நாளும் அவங்க எனக்காக செய்வதில் தொடங்கி எல்லா விஷயத்திலும் என்கூடவே இருக்காங்க. அவங்க இல்லைனா நான் இப்படி இருப்பேனானு தெரியவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X