Sneha: என்னது கமல் ஹீரோவா?.. அய்யயோ லிப் லாக் இருக்கும் முடியாது.. பதறிய சினேகா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Sneha (சினேகா) வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிப்பதற்கு சினேகா பதறிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்தார்.

It has come to light that Sneha was nervous about acting in Vasool Raja MBBS

புன்னகை அரசி: சினேகா ஹோம்லியான வேடங்களில் அசால்ட்டாக நடித்தவர். குறிப்பாக அவரது சிரிப்பை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ரசித்தது என்பதுதான் உண்மை. அதன் காரணமாக அவர் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து பெரிய ரவுண்டு வந்து கொண்டிருந்த அவர் கோவா படத்தில் நடித்தபோது பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ரீ என்ட்ரி: இடையில் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்தார். சூழல் இப்படி இருக்க விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி பின்னர் அது உறுதியும் ஆனது. இதனால் தளபதி 68 மூலம் அவர் ரீ என்ட்ரி கொடுக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்தில் சினேகாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வசூல் ராஜா எம்பிபிஎஸ்: சினேகாவின் கரியரில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்தப் படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்ததால் பெரிதும் கவனம் ஈர்த்தார் அவர். அதேசமயம் அந்தப் படத்தில் அவர் நடிப்பதற்கான ஸ்கோப் பெரிதாக இல்லாவிட்டாலும் பாடலில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டார் சினேகா.

பதறிய சினேகா: இந்நிலையில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிப்பதற்கு சினேகா பதறிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்துக்கான பேச்சுவார்த்தையை சரண் சினேகாவிடம் நடத்தியிருக்கிறார். அப்போது ஹீரோ யார் என்று சினேகா கேட்க கமல் ஹாசன் என்று சொல்லியிருக்கிறார் சரண். உடனே சினேகா பதறி என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

கண்டிஷன்: அதற்கு என்ன காரணம் என்று சரண் கேட்க; சினேகாவோ, கமல் படம் என்றாலே லிப் லாக் இருக்கும். இந்தப் படத்தில் நான் லிப் லாக் செய்யமாட்டேன். இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால் நான் இதில் நடிக்கிறேன் என கூறியிருக்கிறார். சரணும் அதற்கு ஒத்துக்கொண்டாராம். அதன் பிறகுதான் அந்தப் படத்தில் சினேகா நடித்தாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X