STR: சிம்பு மீது வழக்கு கொடுக்க போன ரீமாசென்.. நயன்தாராவுடன் நடித்த படத்தில் நடந்த கூத்து..

சென்னை: கடந்த 2006 ஆண்டு சிலம்பரசன் இயக்கி நடித்த படம் வல்லவன். இந்த படத்தில் ரீமா சென், நயன்தாரா, அஞ்சலி என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு இந்த படம் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. பெரிய வெற்றிப் படமாகவும் மாறியது. இந்த படத்தில் நடித்த ரீமாசென், இந்த படத்தில் தனக்கு சொன்ன கதை வேறு எடுத்த கதை வேறு என சிம்பு மீது வழக்கு தொடுக்க திட்டமிட்டார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

வல்லவன் படத்தின் ஒரு பலம் சிம்பு என்றால் மற்றொரு பலம் யுவன். இது சிம்பு கதாநாயகனாக நடிக்கும் 9வது படம். மேலும் இந்த படத்தை அவரே இயக்கினார். சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு முன்னர் மன்மதன் படத்தில் இணைந்து மாபெரும் வெற்றிப் படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. அதன் பின்னர், இந்த படத்தில் இணைந்தனர். 3 மணி ஓடக்கூடிய படத்தில் பாடல்கள் மட்டுமே 45 நிமிடங்கள் வரும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை குறித்து சொல்லவே வேண்டாம். ரீமா சென்னிடம் பிரேக்-அப் செய்துவிட்டு சிம்பு நடந்து வரும் காட்சிக்கு ஃபயர் விட்டிருப்பார் யுவன்.

Reema Sen Plans To File Case Against STR Simbu For Vallavan Movie Throwback

நயன்: ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி, சரத்குமாருடன் ஐயா மற்றும் தலைமகன் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த நயன்தாரா வல்லவன் படத்தில் முதல் முறையாக சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் போது இவர்களுக்கு கிடைத்த அறிமுகம் அதன் பின்னர் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதுவே படத்திற்கு விளம்பரமாகவும் மாறியது. படம் ரிலீஸ் ஆன பின்னர், அதே ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதன்பின்னர் சிம்பு உடன் நடிக்க மாட்டேன் என நயன்தாரா உறுதியாக இருந்தார். ஆனால், கடந்த 2016 ஆம் வெளியான "இது நம்ம ஆளு" படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்தார்கள்.

Take a Poll

சிம்பு: இயக்குநராகவும் முதல் படத்திலேயே ஜெயித்த சிம்பு அதன் பின் எந்த படத்தையும் இயக்கவில்லை. ஆனால் வல்லவன் நிறைய பேருக்கு பிடித்த படம். தனது 51 வது படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் அந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குவதால், தனது 60 வது படத்தை இயக்க சிம்பு முடிவெடுத்துள்ளார். இதை அஷ்வத் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறினார்.

Reema Sen Plans To File Case Against STR Simbu For Vallavan Movie Throwback

ரீமா சென்: படத்தில் வில்லி வேடத்தில் நடித்த ரீமா சென். இவரது கதாபாத்திரம் படம் பார்த்த அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போனது. ஆனால் ரீமாசென், படம் வெளியாக இருந்த காலகட்டத்தில், தனக்குக் கூறிய கதை வேறு, ஆனால் எடுத்தது வேறு என்றும் தனக்காக வேடம் சரியில்லை என சட்ட ரீதியாக வழக்கு தொடுக்க உள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். ஆனால் படம் வெளியாகி அவர் நடித்த "கீதா" கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது, அதன் பின், சிம்புவிடம் வருத்தம் தெரிவித்தார் ரீமா சென் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X