விஜய்க்கு சங்கீதா நல்ல மனைவியா?.. அவரிடம் அந்த குணம் நிறைய இருக்கு.. சீக்ரெட் உடைத்த எஸ்.ஏ.சி
சென்னை: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி ஆரம்பித்து இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அவரை கடுமையாக விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் அவரது குடும்ப விஷயத்தைத்தான் தோண்டி எடுக்கிறார்கள். அதற்கு காரணம் கடந்த சில காலங்களாக அவரும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள் என்று செய்திகள் தொடர்ந்து பரவிவருகின்றன. அதேசமயம் அதுகுறித்து விஜய்யோ, சங்கீதாவோ எந்தவிதமான கருத்தையும் இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.
விஜய்யின் ரசிகையாகத்தான் முதலில் லண்டனிலிருந்து அவரை பார்க்க வந்தார் சங்கீதா. அந்த சமயத்தில் விஜய்யின் தாய், தந்தையிடம் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது சங்கீதாவை அவர்களுக்கு பிடித்துவிட்டது. அதுமட்டுமின்றி அவரையே விஜய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள். விஜய்க்கும் அவரை பிடித்திருந்தது. இதன் காரணமாக தாயும், தந்தையும் சொன்ன பிறகு மறுப்பேதும் தெரிவிக்காமல் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார் விஜய். அதன்படி கடந்த 1999ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது.

ஃபேமஸ் ஜோடி விஜய் - சங்கீதா: விஜய்யும் சங்கீதாவும் கோலிவுட்டின் ஃபேமஸ் ஜோடியாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், சாஷா என்கிற மகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஜேசன் விஜய்யுடன் போக்கிரி, வேட்டைக்காரன் ஆகிய படங்களின் பாடல்களில் ஒரு காட்சிக்கு தோன்றியிருக்கிறார். மகள் சாஷாவோ விஜய் நடித்த தெறி படத்தின் க்ளைமேக்ஸில் நடித்தார். இதன் காரணமாக அவரது வாரிசுகளும் நடிப்பதற்கு ரெடியாகிவிட்டார்கள் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் ஜேசன் சஞ்சய்யோ தனது தந்தை மாதிரி நடிக்க வராமல் தாத்தா மாதிரி இயக்குநராகும் ஆசையில் இருந்து அதற்கான படிப்படையும் கனடாவில் படித்து முடித்தார்.
சங்கீதா வாங்கிக்கொடுத்த வாய்ப்பு?: படித்துக்கொண்டிருந்தபோதே அவர் ஒரு குறும்படத்தை இயக்கினார். அது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார் சஞ்சய். ஆனால் அவரது கதையில் நடிப்பதற்கு முதலில் எந்த ஹீரோவும் முன்வரவில்லை. அவரும் ஜீவா, கவின், சூரி என பலரிடம் கதை சொன்னதாகவும் ஆனால் அவர்கள் யாருமே நடிக்க முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் சந்தீப் கிஷன் ஜேசனின் இயக்கத்தி நடிக்க ஒத்துக்கொண்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்தது. இப்போது ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பை சங்கீதாவும் அவரது தந்தையும்தான் லைகாவிடம் பேசி வாங்கி தந்ததாகவும் சில குரல்கள் கேட்டன.
என்ன காரணம்?: அதாவது விஜய்க்கும் சங்கீதாவுக்கும் தொடர்ந்து பிரச்னை வந்தது. அதன் காரணமாக சங்கீதா கோபித்துக்கொண்டு தனது தந்தை வீடு இருக்கும் லண்டனுக்கே தனது இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அதன் காரணமாக இப்போது இரண்டு பேருக்கும் பேச்சுவார்த்தை இல்லை. லைகா சுபாஸ்கரனும் சங்கீதாவின் தந்தையும் லண்டனில் நல்ல பழக்கமானவர்கள். அந்தப் பழக்கத்தை அடிப்படையாக வைத்துதான் ஜேசனுக்கு இயக்குநர் வாய்ப்பை வாங்கிக்கொடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டாலும் விஜய் இன்னமும் தனது மகனுக்கு பொதுவெளியில் தெரிகிற மாதிரி வாழ்த்து தெரிவிக்காததற்கு இதுதான் காரணம் என்று பலரும் பேச ஆர்மபித்திருக்கிறார்கள்.

ஏன் இந்த சண்டை?: அதேபோல் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் சண்டை வந்ததற்கு காரணமே வேறு விஷயம் என்று ஒருதரப்பினர் கூறுகிறார்கள். அதாவது லியோ படத்தில் விஜய்யும், திரிஷாவும் நடித்தார்கள். அந்தப் படத்தில் இரண்டு பேருக்கும் லிப் லாக் சீன் இருந்தது. ஏற்கனவே கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னர் விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து கிசுகிசுத்த சூழலில் லியோ பட லிப் லாக் சீன் மீண்டும் அந்தப் பிரச்னையை கிளப்பிவிட்டது என்று பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் இஷ்டத்துக்கு கதை கட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் சங்கீதா லண்டனுக்கெல்லாம் போகவில்லை அவர் இங்குதான் விஜய் வீட்டில் இருக்கிறார் என்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எழுந்திருக்கும் கடுமையான விமர்சனம்: அதுமட்டுமின்றி விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அவர் கொஞ்ச நாட்கள் மனைவியை பிரிந்திருந்தால்தான் அவருக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்ற ஜோசியரின் பேச்சை கேட்டுத்தான் தனது மனைவியை அவர் பிரிந்திருப்பதாகவும் சில தகவல்கள் உறுதியற்ற தன்மையோடு ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் எது உண்மை எது உண்மையில்லை என்பது அவர்களுக்குதான் தெரியும். அதேசமயம் இந்தப் பிரச்னையையும் அரசியல் களத்தில் விஜய்க்கு எதிர் நிலையில் இருப்பவர்கள் கையில் எடுத்து கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். ஆனால் அதற்கு விஜய்யின் ரசிகர்களும் பதிலடி கொடுத்துதான் வருகிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் தங்கள் மருமகள் சங்கீதா குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் அளித்திருந்த அந்தப் பேட்டியில் ஷோபா முதலில் பேசுகையில், 'சங்கீதா எங்களுக்கு அன்பான மருமகள். அவர் குழந்தைகளை வளர்க்கும் விதம் நன்றாக இருக்கிறது. தண்ணீராக இருந்தாலும் ஜூஸாக இருந்தாலும் அவரேதான் தனது பிள்ளைகளுக்கு கொடுப்பார். அதனைப் பார்க்க எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சி, 'ஷோபா சொன்ன மாதிரி சங்கீதா நல்ல மருமகள். அதுமட்டுமின்றி அவர் நல்ல மனைவி என்பதை தாண்டி மொத்தமாக ஒரு நல்ல அம்மாவாக இருக்கிறார். அதேபோல் தன்னுடைய கணவரின் வேலை; அவருக்கு என்ன வருகிறது என்ன போகிறது என்பதை பற்றியெல்லாம் அவருக்கு துளிக்கூட கவலையே இல்லை. குழந்தைகளை குளிக்க வைப்பது முதற்கொண்டு குழந்தைகளுக்கு அத்தனையையும் சங்கீதாதான் செய்வார். அதேபோல் பள்ளிக்கூடத்துக்கு கூட்டி செல்வது, அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வருவது என அவர்தான் செய்வார். கூட்டி வந்ததோடு மட்டுமின்றி ஹோம் ஒர்க் முதற்கொண்டு பசங்களை இவர்தான் செய்ய வைப்பார். ரொம்பவே டெடிகேட்டடான அம்மா. அதே நேரத்தில் பிள்ளைகள் மீது ரொம்ப பொசசிவ் உள்ளவர்" என்றார்.
நழுவிய எஸ்.ஏ.சந்திரசேகர்: அவர்களது இந்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தாலும் இன்னொரு பேட்டியும் ட்ரெண்டாகிவருகிறது. அதாவது சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார் சந்திரசேகர். அப்போது நெறியாளர் அவரிடம் சங்கீதா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு எஸ்.ஏ.சியோ பதிலளிக்காமல் நழுவிவிட்டார். அதனையும் பார்த்த ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன்பு இப்படி மருமகளை புகழ்ந்த சந்திரசேகர் சமீப காலமாக ஏன் எங்கேயும் பேச மறுக்கிறார். ஒருவேளை விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இருக்கும் பிரச்னை உண்மையா; அதனால்தான் சங்கீதா பற்றிய கேள்வியையும், பேச்சையும் தவிர்த்துவிடுகிறாரா என்று கேள்விகள் எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











