விஜய்யை கலாய்த்த டீம்.. வீட்டுக்கு வரவழைத்து மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். ஜன நாயகன் என்ற படத்திலும் நடித்துவரும் அவர் ஒரு பக்கம் ஷூட்டிங் மறுபக்கம் அரசியல் மீட்டிங் என படு பிஸியாக சுழன்று வருகிறார். கண்டிப்பாக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவை வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்பதில் அவரும், அவரது தொண்டர்களும் மும்முரமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்த அவர் தனது மகன் விஜய்யை நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து விஜய்யை சில படங்களை தொடர்ச்சியாக இயக்கிய அவர்; வேற்று மொழி படங்களின் ரைட்ஸை வாங்கி இயக்குநர்களை தேர்ந்தெடுத்து விஜய்யை ஒரு கட்டத்துக்கு உயர்த்தினார். முக்கியமாக முதலில் குடும்பங்கள் கொண்டாடப்படும் ஹீரோவாக விஜய்யை மாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து அதனை செய்தும் காண்பித்தவர்.

விஜய் முன்னணி ஹீரோ: விஜய்யும் தனது பங்குக்கு அசுரத்தனமான உழைப்பை போட்டார். அதன் பலனாக தமிழில் ஏராளமான ஹிட் படங்களை வரிசையாக கொடுக்க ஆரம்பித்தார் விஜய். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார். சூழல் இப்படி இருக்க நடிகர் விஜய்யை அரசியல் தலைவர் விஜய்யாக மாற்றுவதற்கும் முதல் விதையை சந்திரசேகர்தான் போட்டார். அதன்படி விஜய்யின் ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி பல நலத்திட்ட உதவிகளை செய்ய வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகம்: அதனைத் தொடர்ந்து விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று ஆரூடம் கூறப்பட்டது. அதன்படி அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார் விஜய். கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த வருடம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடந்தது. இதில் விஜய்யின் தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரும் கலந்துகொண்டார்கள். இதற்கிடையே விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் அவ்வப்போது சில உரசல்கள் வந்துபோனதும் நினைவுகூரத்தக்கது.
மும்முர பணியில் விஜய்: அரசியல் கட்சி தொடங்கிவிட்டதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார் விஜய். அந்தப் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஹெச்.வினோத் படத்தை இயக்கிவருகிறார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் விஜய்யுடன் நடித்துவருகிறார்கள். படத்தின் போஸ்டர்களை பார்க்கையில் கண்டிப்பாக இது அரசியல் ரீதியான படமாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் செய்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
மிரட்டிய சந்திரசேகர்: அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படங்களை கலாய்ப்பார்கள். அப்படி விஜய் நடித்த போக்கிரி படத்தை பேக்கரி என்கிற பெயரில் கலாய்த்திருக்கிறார்கள். இதனை பார்த்து காண்டான எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த லொள்ளு சபா டீமை தனது வீட்டுக்கு அழைத்து கண்டபடி திட்டிவிட்டாராம். மேலும் மிரட்டும் தொனியிலும் பேசினாராம். உடனே அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராம் பாலாவோ அந்த எபிசோடை தான் இயக்கவில்லை; தனது உதவி இயக்குநர்கள் இயக்கிவிட்டார்கள் என்றாராம். ஆனாலும் சந்திரசேகர் கூல் ஆகவில்லையாம். அதனைத் தொடர்ந்து விஜய்யை பற்றி தனியாக ஒரு ப்ரோகிராம் செய்த பிறகுதான் அந்த பிரச்னை சுமூகமாக முடிந்ததாம். இதனை லொள்ளு சபா சுவாமிநாதன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











