அப்பாவுடன் சண்டை.. காரை எடுத்துட்டு கிளம்பிய விஜய்.. அம்மாவின் சமாதானம்.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய்; அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திக்க முடிவு செய்திருக்கிறார். நீண்ட காலம் கட்சியானது அரசியல் தளத்தில் இயங்க வேண்டுமென்றால் இந்தத் தேர்தலை தனித்து சந்திப்பதே சரியாக இருக்கும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். அதேசமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலிலும்; அவரது செயல்பாடில் சுணக்கம் இருப்பதாக பலரும் புலம்புகிறார்கள். இதற்கிடையே குடும்ப பிரச்னை வேறு தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.
எஸ்.ஏ.சி துணையோடு சினிமாவுக்குள் வந்து; தனது திறமையால் வளர்ந்தவர் விஜய். கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கக்கூடிய ஹீரோக்களில் ஒருவரான அவர் அரசியலுக்கு வர வேண்டும் என தந்தை சந்திரசேகர் ரொம்பவே மெனக்கெட்டார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டன. தொடர்ந்து அரசியல் கட்சியையும் ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையே தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் அவருக்கு மனக்கசப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பக்கத்தில் சேர்க்காத விஜய்: அந்த மனக்கசப்பிலிருந்து விஜய் தனது தந்தையிடமிருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறார். அரசியல் பிரவேசம் செய்ததால் கண்டிப்பாக தனது ஆலோசகராக தந்தை சந்திரசேகரைத்தான் பக்கத்தில் வைத்திருப்பார் என எல்லோருமே எதிர்பார்த்தார்கள். ஆனால் எஸ்.ஏ.சி இடத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். விஜய் அரசியலில் நிலைக்க வேண்டுமென்றால் எஸ்.ஏ.சி அவர் அருகில் இருக்க வேண்டும் என அமீர் உள்ளிட்டோர் அட்வைஸும் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
முதல் மாநாட்டில் தந்தை: விஜய்க்கும், சந்திரசேகருக்கும் இருந்த மனஸ்தாபம் கொஞ்சம் நீங்கியிருப்பதை தவெகவின் முதல் மாநாட்டின்போது உணர முடிந்தது. ஆனால் அதற்கு பிறகு கட்சி தொடர்பான எந்த மேடையிலும் அவரை பார்க்க முடியவில்லை. ஏற்கனவே மனைவி சங்கீதாவுடன் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து வரைக்கும் அந்த விவகாரம் வந்து நிற்கிறது. பற்றாக்குறைக்கு எஸ்.ஏ.சியுடனும் விஜய்க்கு சரியான புரிதல் இல்லை; தாய், தந்தை, மனைவியையே சரியாக பார்த்துக்கொள்ளாதவர் எப்படி தமிழ்நாட்டை பார்த்துக்கொள்வார் என்பது பிரதானமான விமர்சனமாக மாறியிருக்கிறது.
பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஷ்ணு படத்துக்கு நான்தான் தயாரிப்பாளர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்தனை பேர் நின்றிருந்தார்கள். கேமரா ரோலில் இருக்கிறது. அப்போது சந்திரசேகருக்கும், விஜய்க்கும் சண்டை வந்துவிட்டது. எல்லோருமே அதை பார்த்தார்கள். விஜய்யோ கோபமாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. பிறகு அவரது அம்மா ஷோபா சமாதானம் செய்து இரண்டு பேரையும் சேர்த்து வைத்தார்.
விஜய்யின் கேரக்டர்: விஜய் பற்றி அவரது நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னது மேற்கொண்டு அதிர்ச்சி கொடுத்தது. அதாவது ஒரு ரூமில் நண்பரக்ளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது; விஜய்க்கு பிடிக்காத விஷயத்தை பேசி சிரித்துவிட்டால் போதும்; உடனே கையில் என்ன கிடைக்கிறதோ அதை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிடுவார். கதவையும் வேகமாக சாத்திவிட்டு செல்வாராம். அப்படி நடந்தால் மூன்று மாதங்கள் வரைகூட பேசாமல் இருப்பாராம்" என்றார். அவரது இந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications















