Vijay And S.J.Suryah - விஜய் ஃபோன் பேசும்போது ஒட்டுக்கேட்ட எஸ்.ஜே.சூர்யா.. என்ன இப்படியெல்லாம் நடந்திருக்கு?

சென்னை: S.J.Suryah (எஸ்.ஜே.சூர்யா) குஷி ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ஃபோன் பேசிக்கொண்டிருக்கும்போது எஸ்.ஜே.சூர்யா ஒட்டுக்கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.

நடிகராக இப்போது கலக்கிவரும் எஸ்.ஜே.சூர்யா தனது கரியரை இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக தொடங்கியவர். பிறகு வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அஜித் எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் வாலி படம் அவரது கரியரில் தி பெஸ்ட் படங்களில் ஒன்று. இப்போது வில்லத்தனத்தில் கலக்கிவரும் அஜித் வில்லனாக நடித்த முதல் படம் வாலி. இரட்டை வேட படங்களில் வித்தியாசமான படமும் வாலிதான்.

S.J.Suryah Shares a Experience With Vijay And Kushi Movie Shooting

வாலி, குஷி: தம்பியின் மனைவியை அடைய நினைக்கும் அண்ணன் செய்யும் காரியங்களை த்ரில்லராகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் வெளியான சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வாலி திரைப்படம் மெகா ஹிட்டானது. வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார்.

வேற லெவல் குஷி: காதலர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னை என்ற சாதாரண லைனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் இன்றுவரை க்ளாசிக் படமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக படத்தில் இதுதான் நடக்கப்போகிறது என டைட்டில் கார்டிலேயே கதையை கூறிய எஸ்.ஜே.சூர்யாவின் தைரியம் பரவலாக பேசப்பட்டது.

விஜய்க்கு முக்கியமான படம்: படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் கொண்டாடும்படி இருக்கும். பாடல்களிலிருந்து எஸ்.ஜே.சூர்யாவின் மேக்கிங்வரை குஷி ஒரு கம்ப்ளீட் ஃபீல் குட் பேக்கேஜ். குறிப்பாக விஜய்யின் கரியரில் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ந்த படமாகவும் குஷி இருக்கிறது. இன்றுவரை விஜய்யின் சிறந்த லுக்குகளில் குஷி படத்தில் அவர் வரும் லுக் தளபதி ரசிகர்களின் டாப் 3 லிஸ்ட்டில் இருக்கும்.

ஒட்டுக்கேட்ட சூர்யா: இந்நிலையில் குஷி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது மேக்கௌரினா மேக்கௌரினா பாடல் ஷூட்டிங் கொல்கத்தாவில் நடந்துகொண்டிருந்திருக்கிறது. அந்தப் பாடலில் ஷில்பா ஷெட்டியும், விஜய்யும் வேற லெவலில் நடனம் ஆடியிருப்பார்கள். அந்தப் பாடல் ஷூட்டிங்கின்போது விஜய் அடிக்கடி தனது ஃபோனை எடுத்துக்கொண்டு தனியாக ஒதுங்குவாராம்.

இதை கவனித்துக்கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யா இவர் யாரிடம் இப்படி பேசிக்கொண்டே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க திட்டமிட்டாராம். அதன்படி ஒருமுறை விஜய் ஃபோனோடு ஒதுங்கும்போது அவருக்கே தெரியாமல் விஜய்யின் குரல் கேட்கும் தூரத்தில் நின்றுகொண்டாராம் சூர்யா. அப்போது விஜய் தனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து டேய் இப்போ நான் யாரோட தெரியுமா டான்ஸ் ஆடிட்டு இருக்கேன் ஷில்பா ஷெட்டியோடு ஆடிட்டு இருக்கேன் டா என்று ஆச்சரியத்தோடு சொல்லிக்கொண்டிருந்தாராம்.

இதனை எஸ்.ஜே.சூர்யா ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். அதனை கேட்ட விஜய் ஒஹோ எனக்கே தெரியாமல் நான் பேசுவதை ஒட்டு வேற கேட்டிருக்கீங்களா க்யூட்டான எதிர்கேள்வி கேட்டார். அதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X