அப்பவே வீட்டை விட்டு துரத்தியிருப்பாங்க.. ஜி.வி. பிரகாஷ் குமார் மனைவி சைந்தவி த்ரோபேக் பேட்டி!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம், சதா நடிப்பில் வெளியான 'அந்நியன்' திரைப்படத்தில் இடம்பெற்ற "அண்டங்காக்கா கொண்டைக்காரி" பாடலைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சைந்தவி.

தொட்டி ஜெயா, ஏபிசிடி, சரவணன், பட்டியல், பரமசிவன், ஆதி, வரலாறு, அழகிய தமிழ் மகன், கண்ணாமூச்சி ஏனடா, படிக்காதவன், பையா, சுறா, மதராசபட்டினம், உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, தெய்வத்திருமகள், வெடி, மயக்கம் என்ன, வேட்டை, சகுனி, சுந்தரபாண்டியன், தாண்டவம், ராஜா ராணி, நான் சிகப்பு மனிதன், திரிஷா இல்லனா நயன்தாரா, தெறி, அசுரன், சூரரைப் போற்று, தலைவி, ஜெயில், யானை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் பின்னணிப் பாடல்களை சைந்தவி பாடியுள்ளார்.

Saindhavi throwback interviews are circulated in social media amid GV Prakash divorce issue

இதில், பல படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் “ அம்மா என்னும் மந்திரமே” பாடலை சைந்தவி ஜிவி பிரகாஷ் இசையில் பாடியிருந்தார். காதலித்து திருமணம் செய்துகொண்டு 11 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் தற்போது நிரந்தரமாக பிரியப் போவதாக அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சைந்தவி அளித்த த்ரோபேக் பேட்டிகள் அதிகமாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இருவரும் பிரிகிறோம்: ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்றும் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கங்களில் போன்றவை வெளியிட்டு நேற்று இரவு அறிவித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்?: ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையை கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்து வந்ததாகவும் தொடர்ந்து சினிமா படப்பிடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால், குடும்பத்தை ஜிவி பிரகாஷ் கவனிக்கவில்லை என்றும் அதனால் சைந்தவி அவரிடம் சண்டை போட்டதுதான் பிரச்சனைக்கு காரணம் என கூறுகின்றனர். மேலும், ஏகப்பட்ட கிசுகிசுக்களும் கிளம்பியுள்ளன.

Saindhavi throwback interviews are circulated in social media amid GV Prakash divorce issue

வீட்டை விட்டு துரத்தி இருப்பாங்க: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சைந்தவி அளித்த பேட்டி ஒன்று அவரைப் பற்றி ஏகப்பட்ட விஷயங்களை கூறினால். எம்எஸ்சி சைக்காலஜி படித்துள்ள சைந்தவி அனைத்திலும் ரொம்பவே சென்சிடிவ் என்றும் எதையுமே செய்யக்கூடியவர் என்றும் கூறியுள்ளார். சம்பாதித்து முதலில் பைக் வாங்குனீங்களா? அல்லது கார் வாங்குனீங்களா? என்கிற கேள்விக்கு பதில் அளித்த சைந்தவி கார் தான் வாங்கினேன். பைக் வாங்கி இருந்தால் அப்பவே வீட்டை விட்டு துரத்தி இருப்பார்கள் என செம ஜாலியாக பதில் அளித்தார்.

அன்பான பெண்: எப்போதுமே தனது கணவர் ஜி.வி. பிரகாஷ் மீது அளவு கடந்த காதல் கொண்டுள்ள சைந்தவி திடீரென இப்படியொரு முடிவெடுக்க என்ன காரணம் என்றும் யார் மீது தவறு உள்ளது என்றும் மகளின் எதிர்காலம் குறித்தும் ஏகப்பட்ட கேள்விகளையும் சந்தேகங்களையும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

பாவம் ஜி.வி. பிரகாஷ்: ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு ரெபல், கள்வன், டியர் என வரிசையாக 3 படங்கள் வெளியாகின. அடுத்ததாக கிங்ஸ்டன் எனும் படம் வெளியாக காத்திருக்கிறது. சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோவாக சாதிக்க வேண்டும் என தொடர்ந்து சினிமாவில் அதிக கவனத்தை அவர் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மற்றவர்களுக்கு உதவுவது, சமூக அக்கறையில் கருத்து சொல்வது என புரட்சிகரமான முகத்தை காட்டி வந்த ஜி.வி. பிரகாஷ் வாழ்க்கையில் இப்படியொரு பஞ்சாயத்தா? என்றும் ஜி.வி. பிரகாஷ் ரசிகர்களும் ஷாக் ஆகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X