சல்மான் கான் நடிகையோடு கிளாமர் ஆட்டம்.. தோளில் தூக்கிப் போட்டு.. தீயாக பரவும் வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் சிகிந்தர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடைபெற்று வருகிறது. படம் வரும் 27ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாத இறுதியில் மொத்த பாலிவுட்டும் சிகிந்தர் படம் குறித்துதான் பேசும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 43 வது ஃபிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் நடிகையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு போகும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் சினிமா விருதுகளில் ஃபிலிம் ஃபேர் விருதுக்கு எப்போதும் நல்ல மதிப்பும் வரவேற்பும் உள்ளது. இதுவரை 69 ஃபிலிம்ஃபேர் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு 70வது ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

காரணம் ஃபிலிம் ஃபேர் விருது கிட்டத்தட்ட தேசிய விருதுக்கு நிகரான ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ் சினிமாவில் அதிக முறை ஃபிலிம் ஃபேர் விருது வாங்கியவர் என்றால் அது நடிகர் கமல்ஹாசன் மட்டும்தான். பல நடிகர்களும் ஒரு ஃபிலிம் ஃபேர் விருது வாங்கவே போராடிக்கொண்டு இருக்கும் போது அவர் மட்டும் 33 ஃபிலிம் ஃபேர் விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.

Salman Khan Filmfare Awards Throwback

சல்மான் கான்: ஃபிலிம் ஃபேர் விருதை ஒருவர் பெறுகிறார் என்றால் அவரது விருது பெற்ற படம், அவரது முந்தைய படங்கள் என அனைத்துமே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் கவனிக்கப்படும். அந்த அளவிற்கு ஒரு நடிகரை புகழ் பெற்ற நடிகராக அந்த ஃபிலிம் ஃபேர் விருது மாற்றிவிடும். இப்படியான நிலையில், கடந்த 1998 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற 43வது ஃபிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் அரை நிர்வாணமாக நடனம் ஆடியுள்ளார்.

பாய்ந்த நடிகை: தனது கட்டுமஸ்தான உடலைக் காட்டுகிறேன் என அவர் மேலாடை எதுவும் அணியாமல் வந்து நடனமாடுகிறார். அப்போது ஒரு இளம் நடிகை அவருடன் சேர்ந்து கொண்டு கிளாமர் நடனம் ஆடுகிறார். அதிலும் மேடையில் சல்மான் கானுக்கு அந்த நடிகை முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார். இறுதியாக சல்மான் கான் அந்த நடிகையை தூக்கி தனது தோளில் போட்டுக் கொண்டு அனைவரையும் நோக்கி கையை அசைத்து விட்டு, அதன் பின்னர் நடிகையை தூக்கிக்கொண்டு மேடையில் இருந்து வெளியேறுகிறார்.

வீடியோ: இது தொடர்பான வீடியோவை ஃபிலிம் ஃபேர் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வரும் காட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டு தான் என்றாலும் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோவை இப்போது பகிர்ந்துள்ளதால், இணையத்தில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

சிகிந்தர்: சல்மான் கான் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் சிகிந்தர். இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகவுள்ளதால், சல்மான் கான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X