Samantha : லிங்குசாமிக்கு அந்த நடிகைதான் உயிர்; சந்தானம் எல்லாரையும் உஷார் பண்ணுவார் - சமந்தா சொன்ன சீக்ரெட்

சென்னை: Samantha Birthday (சமந்தா பிறந்தநாள்) நடிகை சமந்தா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் இயக்குநர் லிங்குசாமி குறித்தும், சந்தானம் குறித்தும் பகிர்ந்த சீக்ரெட்டை பார்க்கலாம்.

நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் பலரது கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் சுமாராக போனாலும் சமந்தாவின் கிராஃப் சூப்பராகவே சென்றது. அடுத்தடுத்து அவருக்கு படங்களும் புக்காக தொடங்கின.

Samantha birthday Special.. She Opens up Secret about santhanam and director Lingusamy

முன்னணி நடிகை: அதன் பிறகு அவர் நடித்த நான் ஈ படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அதன் காரணமாக மேலும் பல படங்களில் கமிட்டானார். அதுமட்டுமிண்றி அந்தப் படம் அவருக்கு தெலுங்கிலும் கதவை திறந்து வைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய்யுடன் கத்தி, மெர்சல், சூர்யாவுடன் அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் சமந்தா.

நாக சைதன்யாவுடன் காதல்:அந்தப் படத்தில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தவர் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவரை திருமணமும் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. திருமணத்திற்கு பிறகும் அவர் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி சிறப்பாக நடித்துவந்தார். ஆனால் திடீரென சில வருடங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிந்துவிட்டனர்.

ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்: சினிமாக்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் ரசிகர்களின் எண்ண ஓட்டத்தையும், மாறி வரும் ஓடிடி கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் ஃபேமில் மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்தார் சமந்தா. அதில் அவரது நடிப்பு அனைவரையுமே ஈர்த்தது.அதுமட்டுமின்றி ஹாலிவுட் படத்திலும் கமிட்டானார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது வாழ்க்கையில் ஒரு இடி விழுந்தது.

Samantha birthday Special.. She Opens up Secret about santhanam and director Lingusamy

மயோசிடிஸ் நோய்: அரிதான நோய் என கருதப்படும் மயோசிடிஸ் எனும் தோல் வியாதி அவரை தாக்கியது. இதனால் நடிப்புக்கு கொஞ்சம் கேப் விட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். பல மாத சிகிச்சைக்கு பிறகு நோயிலிருந்து மீண்ட சமந்தா இடி விழுந்த வீட்டில் பூத்த பூச்செடியாய் இன்று சிரித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிட்டாடல்: சமீபத்தில் அவர் நடித்த சாகுந்தலம் படம் படுதோல்வியை சந்தித்தது.நடிகைக்கு தோல்வி இயல்புதான் என்பதை புரிந்துகொண்ட சமந்தா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அதன்படி ஹாலிவுட்டில் உருவாகும் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய ரீமேக்கில் நடிப்பதற்கு சமந்தா கமிட்டாகியிருக்கிறார். அதேபோல் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் குஷி படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Samantha birthday Special.. She Opens up Secret about santhanam and director Lingusamy

சீக்ரெட் சொன்ன சமந்தா: இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமி குறித்தும், நடிகர் சந்தானம் குறித்து சமந்தா சீக்ரெட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதாவது, சந்தானமும், சமந்தாவும் பல்லாவரத்தை சேர்ந்தவர்களாம். சமந்தா பள்ளியில் படிக்கும்போது அந்தப் பக்கமாக வரும் சந்தானம் பல பெண்களை உடனே உஷார் செய்துவிடுவாராம்

அதேபோல் இயக்குநர் லிங்குசாமி நடிகை அனுஷ்காவின் வெறித்தனமான ரசிகராம். அஞ்சான் படத்தில் சமந்தா நடித்தபோது அவரிடம் லிங்குசாமி அனுஷ்கா குறித்து பேசிக்கொண்டே இருப்பாராம். அதற்கு சமந்தாவோ சார் போதும் சார் எப்போ பார்த்தாலும் அனுஷ்கா அனுஷ்காதானா என கேட்பாராம். அதுமட்டுமின்றி தனது காரிலும் அனுஷ்காவின் புகைப்படத்தை அவர் ஒட்டியிருந்தாராம். இந்தத் தகவலை அஞ்சான் பட சமயத்தில் ஒரு பேட்டியில் கூறினார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X