சமந்தா முன்னாடி ஒரு காலத்துல சாய் பல்லவி எப்படி நிக்கிறாரு பாருங்க.. டிரெண்டாகும் த்ரோபேக் வீடியோ!
சென்னை: சமந்தா மற்றும் சாய் பல்லவி இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். ஆனால், தெலுங்கிலும் இவர்கள் இருவரும் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். நாக சைதன்யாவை சமந்தா பிரிந்த நிலையில், தொடர்ந்து அவருடன் ஜோடி போட்டு நடித்து வரும் சாய் பல்லவி இந்த மாதம் காதலர் தினத்தன்றும் நாக சைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது படத்தின் புரமோஷனை செய்திருந்தார்.
இந்நிலையில், சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாக சாய் பல்லவி சமந்தா முன்பாக நன்றி கூறி வணக்கம் தெரிவிக்கும் த்ரோபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சாய் பல்லவி: தமிழில் விஜய் டிவியில் வெளியான உங்களில் யாரு பிரபுதேவா நிகழ்ச்சியில் நடனமாடி அசத்திய சாய் பல்லவி அதை தொடர்ந்து 2009ம் ஆண்டு தெலுங்கில் ஈ டிவியில் ஒளிபரப்பான தீ சீசன் 4 நடன நிகழ்ச்சியில் பங்கேற்று 3வது ரன்னர் அப்பாக தேர்வானார். அதன் பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்த சாய் பல்லவி மலையாளத்தில் நிவின் பாலி நடித்து வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
நாக சைதன்யாவுக்கு காதலர் தின வாழ்த்து: நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் 2021ம் ஆண்டு லவ் ஸ்டோரி படத்தில் சாய் பல்லவி இணைந்து நடித்திருந்தார். மீண்டும் தண்டேல் எனும் படத்தில் இருவரும் ஜோடி போட்டு நடித்து வருகின்றனர். பிப்ரவரி 14ம் தேதி நாக சைதன்யா சாய் பல்லவிக்கு காதலர் தின வாழ்த்து சொல்லும் வீடியோவை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது படத்திற்கான புரமோஷன் என்றே சொல்லப்பட்டது.

சாய் பல்லவியை பாராட்டிய சமந்தா: 2009ம் ஆண்டு ஈ டிவியில் ஒளிபரப்பான தீ சீசன் 4 நடன நிகழ்ச்சியில் நடனம் ஆடி அசத்திய சாய் பல்லவியை அந்த ஷோவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமந்தா கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சாய் பல்லவி சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாக தனது நடனத் திறமையால் சமந்தாவை சர்ப்ரைஸில் ஆழ்த்தினார். சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து விட்டு சமந்தா தெலுங்கில் வெகுவாக பாராட்டும் த்ரோபேக் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஒரு காலத்தில் சமந்தா முன்னாடி நின்றுக் கொண்டிருந்த சாய் பல்லவி இன்று சமந்தாவுக்கு சமமாக தனது உழைப்பால் மிகப்பெரிய நடிகையாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமரன் ஹீரோயின்: சிவகார்த்திகேயன் உடன் சமந்தா சீமராஜா படத்தில் ஜோடியாக நடித்த நிலையில், அமரன் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயனும் மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
சீதாவாக சாய் பல்லவி: நாக சைதன்யாவின் தண்டேல், சிவகார்த்திகேயனின் அமரன் படங்களை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க உள்ளார். நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ள ராமாயணம் படத்தில் சாய் பல்லவி தான் சீதா ரோலில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











