முதலமைச்சர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியை கலாய்த்த சஞ்சீவ்.. சி.எம் ரியாக்ஷன் அப்போ என்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். முதலமைச்சரானதும் அவர் கையெழுத்திட்ட மூன்று கோப்புகளுமே விவாதத்தை கிளப்பியிருக்கின்றன. மேலும் அவரது பேச்சை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இனிமேல்தான் விஜய்க்கு உண்மையான தேர்தலே இருக்கிறது என்பது பலரது கருத்து. இந்நிலையில் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த விஜய் முதலில் தந்தை துணையடன்தான் வளர்ந்தார். போகப்போக தனியாக நிற்க கற்றுக்கொண்ட அவர்; அடுத்தடுத்து செய்ததெல்லாம் அசுர பாய்ச்சல். அதன் பலனாக ரசிகர்களின் வெறித்தனமான அன்பு அவருக்கு கிடைத்தது. இது ஒருபக்கம் இருக்க அவர் நடித்த படங்களுக்கு வந்த அரசியல் நெருக்கடிகள் தனியாக கட்சியையும் ஆரம்பிக்க வைத்தன. சில வருடங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல இடங்களில் வெற்றியும் பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்: அதற்கு பிறகும் மெஜாரிட்டி கிடைக்காததால் சில நாட்கள் அவர் கடுமையாக இழுத்தடிக்கப்பட்டார். ஒருவழியாக திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைத்ததையடுத்து இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சரானதும், 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவம், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடி படை, போதை பொருட்களை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடை அலகுகள்' ஆகிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.
குடும்பத்தினர் மகிழ்ச்சி: விஜய் முதலமைச்சரானதை பார்த்து அவரது தந்தை, தாய், நண்பர் சஞ்சீவ் உள்ளிட்டோர் எல்லாம் உச்சக்கட்ட எமோஷனல் ஆனார்கள். இந்த பதவியேற்பு விழாவுக்கு திரிஷாவும் வந்திருந்தார். அவருக்கும், அவரது அம்மாவுக்கும் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் விஜய்யின் மகனோ சஞ்சய்யோ, மகள் சாஷாவோ இந்த விழாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதலமைச்சருடனான நட்பு குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு நடிகரும், விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் கொடுத்திருக்கும் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
என்ன சொன்னார்?: அவர் கொடுத்த பேட்டியில், "சென்னை லயோலா கல்லூரியில் தேர்வுகள் எழுதி முடிக்கும்வரையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன்தான் விஜய் என்று தெரியாது. அந்த தேர்வுகளை எழுதிவிட்டு நானும், ஸ்ரீநாத்தும் நடந்து வந்தோம். அப்போது விஜய்யும் எங்கள் பின்னால் வந்திருக்கிறார். நான் எஸ்.ஏ.சியை பார்த்ததும் ஸ்ரீநாத்திடம், 'மச்சி இவர் ஒரு இயக்குநர். சட்டம், தர்மம் என்றெல்லாம் படம் எடுப்பாரே அவர்தான்" என கொஞ்சம் லந்தாகவே சொன்னேன். இதை விஜய் கவனித்துவிட்டார்.
விஜய்யின் ரியாக்ஷன்: அதனையடுத்து அவர் எங்களிடம், 'பிரதர்' அவர் என்னுடைய அப்பா; நான் ஜோசப் விஜய் என்று கை குலுக்கினார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இருந்தாலும் எப்படியோ சமாளித்துவிட்டோம். அப்போதிருந்து இத்தனை வருடங்கள் ஓடினாலும் எங்கள் நட்பு அப்படியேத்தான் இருக்கிறது. இன்று ஸ்ரீநாத்தும் ஒரு எம்.எல்.ஏ. வாழ்க்கையில் இன்றுதான் நான் அதிக சந்தோஷமடைந்த நாள். இனிமேல் தமிழ்நாடு மக்கள் அனைவருக்குமே சந்தோஷமான நாள்தான்" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
