மேக்கப் ரூமில் நடிகையுடன் கமல் ஹாசன்.. கெஞ்சிய முதல் மனைவி.. வெளியான டாப் சீக்ரெட்.. இதான் நடந்தது
சென்னை: கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் நடிகையுடன் மேக்கப் ரூமில் இருந்த சம்பவமும்; அதனை அறிந்த அவரது முதல் மனைவி மனமுடைந்து கெஞ்சிய விஷயமும் தெரியவந்திருக்கிறது.
கமல் ஹாசன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இந்திய சினிமாவில் யாராலும் மறுக்க முடியாதது. சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததால் என்னவோ அவருக்கு சினிமாவில் தெரியாத ஜானரே இல்லை. குழந்தை நட்சத்திரம், உதவி நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோரி செய்துவிடுபவர் அவர்.

சினிமா பல்கலைக்கழகம்: கமல் ஹாசன் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பமோ இல்லை புதிய கருவியோ வந்தால் அதனை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்துவதும் அவரே. அதனால்தான் அவரை சினிமாவில் நடமாடும் பல்கலைக்கழகம் என்கிறார்கள். மேலும் தற்கால இயக்குநர்கள், நடிகர்கள் கமல் ஹாசனின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.
மஞ்சும்மல் பாய்ஸ்: அதற்கு சமீபத்திய உதாரணம்தான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பொடுவல் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர். 1991ஆம் ஆண்டு குணா படம் எடுக்கப்பட்ட குகையை மையமாக வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை உருவாக்கியிருந்தார். அந்தப் படம் கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் வசூல் மழை பொழிந்துவருகிறது. அதற்கு காரணம் கமல் ஹாசனும், குணாவும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலனும் பாடல்தான்.
கண்மணி அன்போடு காதலன்: வழக்கமான மெலோடியாக இல்லாமல் கமல் ஹாசன் ஐடியா கொடுக்க ஒரு கடிதம் எழுதுவது போல் அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார்கள். அந்தப் பாடல் இப்போதுவரை ஃபேமஸ். மஞ்சும்மல் பாய்ஸில்கூட அந்தப் பாடல் வரும்போது திரையரங்கில் இருந்த ஒட்டுமொத்த பேரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள். அந்த அளவுக்கு பாடல் இன்றுவரை கனெக்ட் ஆகியிருக்கிறது. இப்படி பல புதுமைகளை அப்போதே புகுத்தி இன்றுவரை தனி ஆளுமையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார் கமல் ஹாசன்.
தனிப்பட்ட வாழ்க்கை: கமல் ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளை சந்தித்தவைதான். ஆனால் அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. முதலில் நடிகை வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்தார். பிறகு அவரை பிரிந்து சரிகாவை திருமணம் செய்தார். பிறகு அவரையும் பிரிந்து கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இந்தச் சூழலில் வாணி கணபதியை திருமணம் செய்த பிறகு கமல் ஹாசனின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது வாணி கணபதியை திருமணம் செய்த பிறகு நடிகை சரிகாவுடன் கமலுக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது. அது வாணி கணபதிக்கு தெரிந்துவிட கமலின் நண்பரும், இயக்குநருமான சந்தானபாரதியிடம் சென்ற வாணி; நடந்தவற்றை சொல்லி, "நீங்கள் (கமல்) செய்வது சரியில்லை என்று உங்கள் நண்பரிடம் கொஞ்சம் சொல்லுங்கள்" என கூறியிருக்கிறார்.
அதிர்ச்சியான சந்தான பாரதி: இந்த விஷயம் கமல் ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனுக்கும் தெரியவர; அவரும், சந்தானபாரதியும் கமல் நடித்துக்கொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு பேசுவதற்காக சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் இரண்டு பேரையும் கமல் ஹாசன் தனது மேக்கப் ரூமுக்கு அழைத்து சென்றாராம். உச்சக்கட்ட அதிர்ச்சியாக அந்த ரூமுக்குள் சரிகாவும் இருந்தாராம்.
இதனால் ஷாக்கான சந்தானபாரதி இதுதொடர்பாகத்தான் பேச வந்தோம். ஆனால் சரிகாவே இங்கு இருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டு பேச சென்ற விஷயத்தை பேசாமலேயே இருவரும் வந்துவிட்டார்களாம். பிறகு பெரிய பிரச்னை எல்லாம் நடந்து வாணி கணபதியை பிரிந்த கமல் ஹாசன்; சரிகாவை வீட்டுக்கு அழைத்து வந்து சிவாஜி கணேசன் தலைமையில் திருமணமும் செய்துகொண்டாராம். இதனை சந்தான பாரதி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











