T.Rajendar - கேமராமேன் கழுத்தில் கத்தி வைத்த டி.ராஜேந்தர்.. ரொம்ப டெரரான ஆளா இருப்பாப்ல போலயே
சென்னை: T.Rajendar (டி.ராஜேந்தர்) வீராசாமி ஷூட்டிங்கின்போது கேமராமேன் கழுத்தில் டி.ராஜேந்தர் கத்தி வைத்த சமப்வம் தெரியவந்திருக்கிறது.
சினிமாவில் இருப்பவர்கள் எப்போதும் உற்சாகத்தோடு இருக்க வேண்டும் என பலர் கூறுவார்கள். ஆனால் அப்படி சொல்பவர்கள் அவ்வாறு இருப்பது அரிதிலும் அரிது. அந்த அரிதானவர்களில் ஒருவர் டி.ராஜேந்தர். திரையிலும் சரி நிஜத்திலும் சரி உற்சாகத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை பலர் கிண்டல் செய்தாலும் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு பட்டதை செய்வதையும் பேசுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர்

ஒருதலை ராகம்: ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ராஜேந்தர் எந்த பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பது என எந்த ஜானரிலும் கில்லியாக இருப்பவர். குறிப்பாக இளையராஜா தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது ஒரு படத்துக்கூட அவரிடம் செல்லாமல் தானே இசையமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் டி.ராஜேந்தர்.
சிம்புவை செதுக்கிய உளி: தன்னை போலவே தன்னுடைய மகனையும் உருவாக்க நினைத்தார். அதன் காரணமாக சிறு வயதிலிருந்தே சிம்புவை கேமரா முன்பு நிறுத்தி அதகளம் செய்தவர். சிம்புவின் வளர்ச்சியில் ஒவ்வொரு நொடியிலும் ராஜேந்தரின் பங்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. அதன் காரணமாகத்தான் சிம்புவாக சிறு வயதிலேயே நடிக்க முடிந்தது, இளம் வயதிலேயே படத்தை இயக்க முடிந்தது, இசையமைக்க முடிந்தது, பாடல் எழுத முடிந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும் சிம்புவின் கதை இன்னமும் முடியாததற்கு டி.ராஜேந்தரின் பங்களிப்பு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது.
என்ன ஆனாலும் டி.ஆர்தான்: சினிமாவின் காலகட்டம் மாறும்போது பலரும் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒதுங்கிக்கொள்வார்கள். ஆனால் டி.ராஜேந்தரோ அப்படி இல்லை. தற்போதைய தலைமுறை சினிமா மாறிக்கொண்டிருந்த ஆர்மபக்கட்டத்தில் வீராசாமி என்ற படத்தை இயக்கினார். ஏன் சமீபத்தில்கூட சந்தானத்திடம் ஒரு கதை யோசித்திருக்கிறேன் நீ நடிகர் சந்தானமாகவே நடி என அவர் சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கழுத்தில் கத்தி: இந்நிலையில் வீராசாமி படத்தின் கேமராமேன் கழுத்தில் டி.ராஜேந்தர் கத்தி வைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது படத்தின் ஒரு காட்சியில் டி.ராஜேந்தர் இன்னொரு நடிகரின் கழுத்தில் கத்தியை வைக்க வேண்டும். அந்தக் காட்சியை எடுக்கும்போது டி.ஆர் கேமராமேனிடம் நான் கத்தியை வைக்கும் வேகமும் கேமரா அதை நோக்கி திரும்பும் வேகமும் சரி சமமாக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
ஆனால் படத்தின் கேமராமேனோ கொஞ்சம் வயதான ஆளாம். அதன் காரணமாக டி.ராஜேந்தரின் வேகத்துக்கு அவரால் கேமராவை திருப்ப முடியவில்லையாம். பல முறை டேக் சென்ற பிறகு ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ராஜேந்தர் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதன்படி ஒரு கையில் அட்டக்கத்தியை கொண்டு நடிகரின் கழுத்திலும், உண்மையான கத்தியை கொண்டு கேமராமேன் கழுத்திலும் வைத்திருக்கிறார். அதன் பிறகு அந்த கேமராமேன் டி.ராஜேந்தரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து கேமராவை சரியாக திருப்பினாராம். இந்தத் தகவலை சந்தானம் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











