Santhanam: காமெடியனாக நடிக்க நான் தயார்.. அதில் ஒரு பிரச்னையும் இல்லை.. சந்தானம் ஓபன்!

சென்னை: நடிகர் சந்தானம், விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார். சின்னத்திரையில் இருந்த இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர், நடிகர் சிம்பு. சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சந்தானம், அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து மிகவும் பிஸியான காமெடி நடிகராக மாறினார். ஒரு கட்டத்தில் காமெடியனாக நடிக்க மாட்டேன், இனிமேல் நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என முடிவு எடுத்தார். கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் சந்தானம், இனி வரும் காலங்களில் காமெடியனாகவும் நடிக்கத் தயார் என பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படங்களில் பலரது கவனத்தினை ரிலீஸுக்கு முன்னரே ஈர்த்த படம் என்றால், அது, சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான மத கஜ ராஜா படம்தான். விஜய் ஆண்டனி இசை அமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை, கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால் சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் படத்தினை இந்த ஆண்டு பொங்கலுக்கு படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.

santhanam interview throwback

படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. படத்தில் சந்தானத்தின் காமெடி மிகவும் அருமையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 15 கோடிகள்தான் என கூறப்படுகின்றது. தற்போது படம், பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 20 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படங்களிலேயே இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு உள்ளது. இன்னும் விடுமுறை நாட்கள் உள்ளதால் படத்தின் வசூல் வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

சந்தானம்: படம் பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடித்தால் நன்றாக இருக்கும். அவருக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் தரமான காமெடிகளைக் கொடுக்கக் கூடிய காமெடியன்கள் என யாரும் அந்த அளவிற்கு இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் நடிகர் சந்தானம் அளித்த பழைய பேட்டி ஒன்றில் தான் காமெடியனாக வரும் நாட்களில் நடிக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

santhanam interview throwback

சிம்பு: அதாவது அந்த பேட்டியில், என்னை முதன் முதலில் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிம்புதான். அவரால்தான் நான் இன்றைக்கு சினிமாவில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். அவரின் மன்மதன் படத்தில்தான் முதன் முதலில் நடித்தேன். அதன் பின்னர் எஸ்.ஜே. சூர்யா சாரின் அன்பே ஆருயிரே படத்திலும் எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து சிம்பு சாரின் அனைத்து படங்களிலும் நடித்தேன்.

santhanam interview throwback

மீண்டும் காமெடியன்: ஒரு கட்டத்தில் என்னால் அவரது வானம் படத்திற்கு டேட்ஸ் கொடுக்க முடியவில்லை. நான் மற்ற படங்களில் நடித்த நேரம் போக மீதி நேரத்தில் தினமும் இரண்டு மணி நேரம் என, ஏ.வி. எம் ஸ்டூடியோவில் படமாக்கினோம். நான் கதாநாயகனாக மாறிய பின்னர் சிம்பு என்னைப் பார்த்து, நீ ஏன் இப்படியொரு முடிவினை எடுத்தாய்? எங்களுடன் அவ்வப்போது எதாவது ஒரு படம் செய்து கொண்டு இருந்திருக்கலாம் எனக் கூறினார். நான் உடனே இப்போது கூட எந்த பிரச்னையும் இல்லை நான் காமெடியனாக நடிக்கத் தயாராக உள்ளேன் தான் கூறியதாக அந்தப் பேட்டியில், சந்தானம் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. சந்தானம் கூறியதைப்போல் அவர் மீண்டும் காமெடியானாக நடித்தால், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

santhanam interview throwback

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X