Nayanthara - நயன்தாராவிடம் அப்படி நடந்துகொண்டால் அவ்வளவுதான் - ரகசியம் பகிர்ந்த மூத்த நடிகை

சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குறித்து மூத்த நடிகை சரண்யா ரகசியம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

ஐயா படத்தின் மூலம் அறிமுகமான் நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saranya Shares about Actress Nayanthara Character

தனிப்பட்ட தாக்குதல்கள்: காதல் ஒருமுறைதான் வர வேண்டும் என்பது இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம். ஆனால் காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் நியதி. அதை நயன்தாரா தீவிரமாகவே ஃபாலோ செய்தார். தனது காதல்கள் தோல்வியில் முடிந்தபோதெல்லாம் தன்னை காதலித்தவர்களை விட்டுவிட்டு தன்னை மட்டும் தனிப்பட்ட முறையில் தாக்குபவர்களை எதிர்கொண்டார் நயன். அந்த தைரியம் அவரைத் தவிர்த்து யாருக்கும் வருமா என்பது சந்தேகமே.

திருமணம்: காதல்கள் தோல்வியில் முடிந்து மூன்றாவதாக இயக்குநர் விக்னேஷ் சிவனை அவர் காதலித்தபோதுகூட இது எத்தனை நாளுக்கோ என்ற வன்மமமான கமெண்ட்ஸையே பெரும்பாலானோர் உதிர்த்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் ஏற்றிக்கொள்ளாத நயன், காதலுக்கு உண்மையாக இருந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் தெய்வீக் என் சிவன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

Saranya Shares about Actress Nayanthara Character

கண்டுகொள்ளமாட்டேன் என்ற நயன்: ஒரு பேட்டியில் பேசிய நயன்தாரா தன்னை பற்றி தவறாக எழுதுபவர்களை பெரிதாக நான் கண்டுகொள்ளமாட்டேன். அப்படி கண்டுகொண்டால் அது நமக்குதான் ஸ்ட்ரெஸ்ஸை கொடுக்கும். நம்மை பற்றி எழுதுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறதா என நினைத்துக்கொள்வேன் என்றிருப்பார். அதுதான் நயன் தாரா.

அவரைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என தனது வேலையில் கவனம் செலுத்துபவர். அதனால்தான் அவர் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்.

Saranya Shares about Actress Nayanthara Character

எல்லோரையும் நம்பும் நயன்: நயன்தாராவை பொறுத்தவரை எல்லோரையும் நம்பிவிடுவார். அவரை ஏமாற்றுவது எளிது அதனால்தான் அவரது வாழ்க்கையில் இவ்வளவு ஏற்ற இறக்கங்கள் என்று அவருடன் பழகியவர்களும், அவரை பற்றி ஓரளவு தெரிந்தவர்களும் கூறியிருக்கிறார்கள். அதேசமயம் யாருக்கும் துரோகம் நினைக்காத அந்த எண்ணம்தான் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது எனவும் பலர் கூறுவதுண்டு.

அவரிடம் அப்படி நடந்தால்: தனக்கு யாரோ துரோகமோ இல்லை தன்னை எதிராளியாகவோ ஒருவர் நினைத்தால் அவரிடமிருந்து முழுமையாக ஒதுங்கிவிடுவாராம். தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார், நம்பர் 1 என்ற நடிகை என்ற நிலையில் இருந்தாலும் மிக மிக சாதாரணமாகத்தான் இருப்பாராம். அதனால்தான் யாரேனும் தன்னை எதிராளியாக நினைத்தால் அவரிடமிருந்து ஒதுங்குவதையே விரும்புவாராம்.

அது ஆங்காரத்தினாலோ இல்லை அதிகாரத்தினாலோ இல்லையாம். அவர்களை தன்னால் சமாளிக்க முடியாது என்ற எண்ணத்தில்தானாம். அதுமட்டுமின்றி நயன்தாரா யாரிடமாவது பேசாமல் இருந்தால் நிச்சயம் அவர் பேசாமல் இருக்கும் நபர் கெட்டவர்தானாம். நயன்தாராவின் இந்த குணங்களை பற்றி மூத்த நடிகை சரண்யா ஒரு பேட்டியில் மிக பெருமையாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X