Nayanthara - என்ன இந்த ட்ரெஸ்ல வந்திருக்க.. ரூமுக்கு போ.. முதல் நாள் ஷூட்டிங்கில் நயன்தாராவை திட்டிய ஹரி
சென்னை: நடிகை நயன் தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இதுவரை மொத்தம் 75 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் அன்னபூரணி என்ற படத்தில் நடித்திருந்தார். படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் ஐயா படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நயன்தாராவை ஹரி திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா அங்கு டிவி தொகுப்பாளராக இருந்து பிறகு ஒரு படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் ஐயா படம் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதுதான் தமிழில் அவருக்கு முதல் படமும்கூட. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று மகன்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் தனது நடிப்பு பயணத்தை தீவிரமாக தொடர்ந்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷ் சிவனும் முழு சப்போர்ட் செய்துவருகிறார்.
ஹிந்தியில் என்ட்ரி: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கில் கலக்கிய அவர் தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலிவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருந்தார். அவர் கணக்குபடி ஜவான் படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அடுத்த படம்: இந்த சூழலில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கவனம் ஈர்த்ததால் நயனுக்கு அடுத்த ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருக்கும் படத்தில் நயன் நடிக்கிறார் என்றும் அதற்காக 12 கோடி ரூபாய் அவருக்கு சம்பளம் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. கடைசியாக தமிழில் அவர் அன்னபூரணி படத்தில் நடித்தார். அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்துவருகிறார்.
ரிஜெக்ட் செய்த பார்த்திபன்: நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். பல தொழில்களையும் செய்துவருகிறார். ஆனால் அவர் சினிமாவில் அறிமுகமானபோது ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்திருக்கிறார். உதாரணமாக பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தில் முதலில் நயன்தாராதான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஆடிஷனுக்கு லேட்டாக வந்ததன் காரணமாக அவர் படத்திலிருந்து ரிஜெக்ட் செய்யப்பட்டார்.
ஐயா நயன்: அதனையடுத்துதான் நயன்தாரா ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தச் சூழலில் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் அவருக்கு பலமான திட்டு விழுந்த விஷயம் தெரியவந்தது. அதாவது அவர் முதல் நாள் ஷூட்டிங்குக்கு பக்கா மாடர்ன் உடையில் சென்றாராம். அதனை பார்த்து ஹரி கடுமையான டென்ஷன் ஆகிவிட்டாராம். உடனே நயனிடம் , ஒழுங்கா ரூமுக்கு போ. நான் உன்னை எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறேன் தெரியுமா. பக்கா கிராமத்து பெண் ரோல் உனக்கு. இப்படி வந்து நிக்கிற. போய் ட்ரெஸ்ஸ மாத்திட்டு வா என்று கோபமாக சொன்னாராம். பிறகு நயன் ரூமுக்கு சென்று உடையை மாற்றிவிட்டு வந்து நின்ற பிறகுதான் ஹரி கூல் ஆனாராம். இதனை நடிகர் சரத்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











