வெறும் 60 ரூபாய்.. ஒரு கார்.. நடுரோட்டில் சரிகா.. அப்படியே துரத்திவிட்டாரா கமல் ஹாசன்?

சென்னை: இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். அவரது நடிப்பில் கடைசியாக கல்கி, இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இவற்றில் கல்கியில் நெகட்டிவ் ரோலிலும், இந்தியன் 2வில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசனை சரிகா பிரிந்த நாள் அன்று என்ன நடந்தது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.

கமல் ஹாசன் என்றால் குழந்தை முதல் பெரியவர்வரை தெரியும். தனது 8ஆவது வயதிலேயே கேமரா முன்பு நின்று, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என கொஞ்சம் மழலை முகத்துடன் எந்தவித பதற்றமுமின்றி நடித்தவர். தொடர்ந்து சினிமாவில் பயணப்பட்ட அவர் முதலில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றினார். பிறகு கே.பாலசந்தர் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Throwback Stories Kamal Haasan Sarika

பல்கலைக்கழகம்: தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக கமல் ஹாசன் அந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் சிவாஜியை நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்; கமல் ஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவில் பல்துறைகளில் வித்தகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். டெக்னாலஜி பெரிதாக வளராத காலகட்டத்திலேயே பல டெக்னாலஜிகளை முயன்று பார்த்து கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.

இந்தியன் 2: அவர் ஹீரோவாக நடித்து கடந்த மாதம் இந்தியன் 2 வெளியானது. அந்தப் படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது. முக்கியமாக இந்தியன் என்ற க்ளாசிக் படத்தை இரண்டாம் பாகம் எடுத்து கெடுத்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் ஓபனாகவே பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் கமல்.

கமலின் பெர்சனல் வாழ்க்கை: கமலைப் பொறுத்தவரை அவரது பெர்சனல் வாழ்க்கை பலமுறை சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. முதலில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்ட அவர் பிறகு சரிகாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன். இருவருமே சினிமாவில் இருக்கிறார்கள். சரிகாவை பிரிந்த கமல் அதன் பின் கௌதமியுடன் வாழ்ந்தார். அந்த லிவிங் டூ கெதர் வாழ்க்கையும் பாதியில் முடிந்தது.

சரிகாவுடன் பிரிவு: இந்நிலையில் கமல் ஹாசனை சரிகா பிரிந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது பல நாட்கள் யோசித்துதான் விவாகரத்து முடிவை கமலும், சரிகாவும் எடுத்தார்களாம். கமல் ஹாசனை பிரிந்து அவர்கள் வாழ்ந்த வீட்டிலிருந்து சரிகா வெளியேறியபோது அவரிடம் வெறும் 60 ரூபாய் மட்டும்தான் பணம் இருந்ததாம். அது தவிர்த்து அவருக்கு சொந்தமான ஒரு கார் மட்டும் இருந்ததாம். அந்தக் காரை எடுத்துக்கொண்டு தனது நண்பர்கள் வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டாராம்.

சிறந்த முடிவு: அதன் பிறகு அங்கும் தங்காமல் நேராக காரை எடுத்துக்கொண்டு வந்து சாலையோரம் காருக்குள்ளேயே அன்றைய இரவில் தூங்கினாராம். இவ்வளவு கஷ்டப்பட்டாலும் கமல் ஹாசனை பிரிந்தது சிறந்த முடிவுதான் என்று உறுதியாக நிற்கிறார் அவர். இதனை சரிகாவே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். கமல் நடித்த தேவர் மகன், ஹேராம் உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக சரிகா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள்; என்ன கமல் சார் தன்னுடன் வாழ்ந்த மனைவி தன்னிடமிருந்து பிரியும்போது அப்படியே வெறுங்கையோடயா அனுப்புவீங்க; இது என்னமோ துரத்திவிட்ட மாதிரி இருக்கு என்று பல கேள்விகளை காட்டமாக கேட்டுவருகின்றனர்.

அதேசமயம் ஒருமுறை சரிகாவுக்கு ஏன் உதவவில்லை என்று கமல் ஹாசனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், 'சரிகா யாருடைய அனுதாபத்தையும் எதிர்பார்ப்பவர் இல்லை. ஒருவேளை நான் அப்படி உதவியிருந்தால் அதை அவர் அவமானப்படுத்தியிருப்பார்' என்று சொல்லியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X