Saroja Devi: நடிக்கும் காலத்திலேயே வந்த 2 முக்கிய உடல்நலப் பிரச்னைகள்.. மீண்டு வந்த சரோஜா தேவி!
சென்னை: மூத்த நடிகை சரோஜா தேவி. அவர் இன்று அதாவது ஜூலை 14ஆம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சரோஜா தேவி இந்திய திரை உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகை. இவர் தனது திரை வாழ்க்கையில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது உடல் ரீதியாக இரண்டு முக்கிய பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளார். எதிர் கொண்டது மட்டும் இல்லாமல் அதில் இருந்து மீண்டும் வந்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைந்தது ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், இவர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்குமானவராகவே கருதப்படுகிறார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி, சலப சுந்தரி, அபிநய காஞ்சனா மாலா, அபிநய பாரதி என புனைப்பெயர்கள் இவருக்கு உண்டு.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் உடன் இணைந்து 26 படங்களில் நடித்துள்ளார். அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 22 படங்களில் நடித்துள்ளார். ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சரோஜா தேவி இந்திய திரை உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகை. இதன் காரணமாகவே இவரை இந்திய சினிமா உலகில் முதல் பான் இந்தியா நடிகை என பலரும் இன்று அடையாளப்படுத்துகிறார்கள்.

அம்மா சொல்லுக்கு கட்டுப்பட்டு: தனது திரை வாழ்க்கை முழுவதும் எந்த நடிகருடனும் கிசு கிசுக்கப்படாத நடிகையாக வலம் வந்தார் சரேஜா தேவி. சரோஜா தேவி தனது திரைவாழ்க்கையில் தனது தாயார் ருத்ரம்மா கூறிய அறிவுரைகளை கடைசி வரை பின்பற்றினார். அதாவது ருத்ரம்மா தனது மகள், சரோஜா தேவி இடம், எக்காரணம் கொண்டும் நீச்சல் உடைகளில் நடிப்பதோ, அறைகுறை ஆடைகளில் நடிப்பதோ கூடாது எனக் கூறி உள்ளார். இதனை சரோஜா தேவி கடைசி வரை பின்பற்றினார். சரோஜா தேதி தான் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் உடல் ரீதியாக இரண்டு முக்கிய பிரச்னைகளை எதிர் கொண்டார்.
நடனம்: சரோஜா தேவி என்றாலே நடனமும் நடிப்பும் தான். இதில் நடனம் முன்னிலை வகிக்க காரணம், இவர் முறையாக நடனத்தைக் கற்றுக் கொண்டு திரை உலகில் காலடி எடுத்து வைத்தது மட்டும் இல்லாமல், அதில் மற்ற நடிகைகளைக் காட்டிலும் சிறந்து விளங்கினார். எந்த பாடல் வைத்தாலும் சரி, சரோஜா தேவிக்கு மட்டும் குறிப்பிட்ட அளவு நேரத்தை தனியே ஒதுக்கி விடுவார்கள்.
உடல் பிரச்னைகள்: அப்படியான நிலையில் தான் அவருக்கு கடுமையான இடுப்பு வலியும், தீராத வயிற்று வலியும் இருந்து வந்துள்ளது. நடனத்திற்கு பெயர் பெற்றவருக்கு இடுப்பு வலி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் அவர் மீண்டும் திரைத்துறையில் ஜொலிப்பது சிரமம் என பலரும் நினைத்த கால கட்டத்தில், தனது இரண்டு உடல் பிரச்னைகளில் இருந்தும் மீண்டு வந்து தனது உச்சத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காதவராக திகழ்ந்தவர் சரோஜா தேவி.


Click it and Unblock the Notifications











