Suriya: சிவக்குமாரை ட்ரோல் செய்த சத்யராஜ்.. விழுந்து விழுந்து சிரித்த சூர்யா.. இது எப்போ நடந்துச்சு?

சென்னை: நடிகர் சத்யராஜ் குசும்பு பிடித்தவர் என தமிழ் திரையுலகில் பலரும் கூறியுள்ளார்கள். ஆமாம், நான் குசும்பு பிடித்தவன்தான், என்பதை நிரூபிக்கும் விதமாக பல மேடைப் பேச்சுகளில் அவரது பேச்சு அவ்வாறாக இருந்துள்ளது. இப்படியான நிலையில் மூத்த நடிகர் சிவக்குமார் போல, சத்யராஜ் இமிடேட் செய்துள்ளார். அதுவும் சூர்யா முன்னிலையில் இமிடேட் செய்துள்ளார். இதைப் பார்த்த சூர்யா, விழுந்து விழுந்து சிரிக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவில், கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தபோது அவருக்கு இருந்து ஒரே நம்பிக்கை நடிகர் சிவக்குமார் மட்டும் தான். சத்யராஜ் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனதற்கு முக்கிய காரணம் நடிகர் சிவக்குமார் தான். இதை சத்யராஜ் பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.

இப்படியான நிலையில், சூர்யா பல ஆண்டுகளுக்கு முன்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற சம்பவத்தை விளக்கிக் கூறும் போது அரங்கத்தில் இருந்து அனைவருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல இமிடேட் செய்தபோது சூர்யாவே ஒன்ஸ்மோர் கேட்டார்.

Sathyaraj Imitate Like Rajinikanth and Sivakumar In Funny Way Suriya Loufter Very Much - throwback Video

சத்யராஜ்: அதாவது, புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினிகாந்த் சார் மற்றும் சிவக்குமார் சார் இணைந்து நடித்த படத்தில், ரஜினிகாந்த் ஒரு டயலாக் பேசுவார். நாகராஜ் நீ கடப்பாரைய சாப்பிட்டுவிட்டு அது ஜீரணம் ஆக சுக்கு கஷாயம் சாப்பிடுகிறாய், கடப்பாரை ஜீரணம் ஆகாது, அது வயிற்றை கிழித்து விடும் என்பதுதான் அந்த டயலாக். இந்த டயலாக்கை ரஜினி சார் அவரது ஸ்டைலில் வேகமாக பேசிவிட்டார் எனக் கூறிய சத்யராஜ், ரஜினிகாந்த் ஸ்டைலில் அந்த டயலாக்கை சொல்லியும் காட்டினார். இதை எதிர்பார்க்காத, சூர்யா, அரங்கில் இருந்த நடிகை ராதா, நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் ஒன்ஸ்மோர் கேட்டார்கள். சத்யராஜ், உடனே அதேபோல் மீண்டும் சொன்னார்.

Sathyaraj Imitate Like Rajinikanth and Sivakumar In Funny Way Suriya Loufter Very Much - throwback Video

சிவக்குமார்: ரஜினிகாந்த் இந்த மாதிரி வேகமாக பேசியதை, சிவக்குமார் சார் திருத்தம் செய்தார். அப்போது சிவக்குமாரைப் போல் இமிடேட் செய்து காட்டினார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சூர்யா விழுந்து விழுந்து சிரித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவமாக இருந்தாலும், சத்யராஜின் இந்த குசும்புத்தனம் வேற லெவலில் இருப்பதாக இணைய வாசிகள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Sathyaraj Imitate Like Rajinikanth and Sivakumar In Funny Way Suriya Loufter Very Much - throwback Video

சூர்யா: நடிகர் சூர்யா தற்போது தனது 45 வது படத்தில் நடித்து வருகிறார். வரும் மே மாதம் முதல் தேதியில் இவரது 44வது படமான ரெட்ரோ படம் வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்களும், ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து படத்தின் புரோமோசன் பணிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பே உள்ளது. மேலும் சூர்யாவுக்கு அவரது கடைசி படமான கங்குவா படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. மொத்தம் இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட கங்குவா படத்தின் முதல் பாகம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடிவாங்கியது. இணைய தளத்தில் இணையவாசிகள் இயக்குநர் தொடங்கி படத்தின் இசையமைப்பாளர் வரை அனைவரையும் ஒருவழி செய்துவிட்டார்கள். ரசிகர்கள் படத்தின் மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

ரசிகர்களின் இந்த ரியாக்‌ஷனை படக்குழுவினர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் படக்குழு டீப் சைலண்ட் மோடுக்குச் சென்றார்கள். திரையரங்க உரிமையாளர்கள் பலரும் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவை கடுமையாக விமர்சித்தனர். படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடிகள் வசூல் குவிக்கும் எனவும் ஓவர் பில்டப் கொடுத்தார். இது மட்டும் இல்லாமல், படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால் படம் வாங்கிய அடியால் அவர் கப் சிப் மோடுக்குச் சென்றுவிட்டார். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தை தயாரித்ததன் மூலம் ஞானவேல்ராஜா பல கோடிகள் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார்.

சூர்யாவுக்கு இப்போது உள்ள நம்பிக்கை என்றால் அது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான ரெட்ரோ படம் தான். இந்த படத்தில் சூர்யாவின் லுக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இது மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கும் இந்த படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. காரணம் இதுவரை படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட பாடல்களான, கண்ணாடிப் பூவே பாடலும், கனிமா பாடலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக கனிமா பாடல் செம துள்ளலாக இருப்பதால் ரசிகர்கள் அதை இணையத்தில் ட்ரெண்ட் செது வருகிறார்கள்.

படத்தின் புரோமோசன் பணிகள் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் படத்தின் டீசரைப் பார்த்த பலரும் படத்தை ஆக்‌ஷன் படம் என நினைத்துக் கொண்டு உள்ளார்கள். ஆனால் படம் பக்காவான காதல் கதை என படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். சூர்யா இந்த படங்களில் செம பிஸியாக இருக்கிறார் என்றால், சிவக்குமாரின் மற்றொரு மகனான நடிகர் கார்த்தி தனது சர்தார் பாகம் 2 படத்தின் ஷூட்டிங்கில் செம பிஸியாக உள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஷூட்டிங்கில் கார்த்திக்கு காலில் அடிபட்டு, அவர் உடனே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது மட்டும் இல்லாமல், கார்த்திக்கு அடிபட்டுவிட்டதால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, கார்த்தி நடிப்பில் உருவாகி ஆடுத்து வெளியாகவுள்ள படம் என்றால் அது, வா வாத்தியார் படம் தான். இந்த படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மீது மொத்த படக்குழுவும் நம்பிக்கையாக உள்ளது. கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது, மெய்யழகன். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X