கிசுகிசுவுக்கு பெயர் போன இயக்குநர்.. சகோதரிகளே அந்த விஷயத்தை ஓபனா சொல்லிட்டாங்களே.. அவர் இப்படியா?
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இயக்கம் அவர்தான் என்றாலும் இயக்குநர் என்கிற இடத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் பெயர்தான் வந்தது. அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ஹிட்டடித்து அவரை முக்கியமான இயக்குநர் என்கிற இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தியது. இப்போது நடிகராக கலக்கிவரும் அவர்; மென்டல் மனதில் என்கிற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
செல்வராகவன் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் கதை, திரைக்கதை, வசனம் செல்வாவுடையதுதான். ஆனால் இயக்குநர் என்கிற இடத்தில் அவரது தந்தை பெயர் இடம்பெற்றிருந்தது. படம் கொஞ்சம் அடல்ட் கன்ட்டென்ட்டாக இருந்ததால் மகனுக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்று அந்த முடிவை எடுத்தார் கஸ்தூரி ராஜா. படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

காதல் கொண்டேன்: துள்ளுவதோ இளமை படத்துக்கு பிறகு செல்வாவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம்தான் தனுஷுக்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும், செல்வராகனவுக்குள் மிகச்சிறந்த இயக்குநர் இருக்கிறார் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பித்தது. இன்றுவரை அந்தப் படம் பலரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அவர் இயக்கிய பல படங்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் கவனம் செலுத்தும் செல்வராகவன்: இடையில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்த செல்வராகவன்; தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமான திருமணம் அன்போடு சென்றுகொண்டிருக்கிறது. அந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் செல்வா நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.

அப்படி அவர் பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களையும் அவர் இயக்கவிருக்கிறார். கடைசியாக தனுஷ் எழுதிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் செல்வராகவன் ஒரு இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்தவகையில் இப்போது மென்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி 2 படங்களை இயக்கிவருகிறார் அவர்.
சகோதரிகள் பேட்டி: இந்நிலையில் செல்வராகவனின் சகோதரிகள் விமல கீதா மற்றும் கார்த்திகா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "செல்வராகவன் பயங்கரமாக கிசுகிசு பேசுவார். அந்த வீட்டில் என்ன நடந்தது இந்த வீட்டில் என்ன நடந்தது என்றெல்லாம் கேட்டு தெரிந்துகொள்வார். அவர் வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பினால் முதலில் எங்கள் அம்மாவுக்குத்தான் ஃபோன் வரும்.
மடியில் படுத்துக்கொண்டு: இவர் வருகிறார் என்று தெரிந்தவுடன் அம்மா நிறைய சமைத்துவிடுவார். இரண்டு பேரும் அமர்ந்து சாப்பிடுவார்கள். அதற்கு பிறகு ஒரு ஷோஃபாவில் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்வார் செல்வார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இரண்டு பேரும் கிசுகிசு பேசிக்கொள்வார்கள். அதுமட்டுமின்றி என்னிடம் (விமலகீதா) ஃபோன் செய்து உன்னை பற்றி கார்த்திகா இப்படி சொல்லிடுச்சு ஏன் சும்மா விட்ட என்று கேட்பார்; அதேபோல் கார்த்திகாவிடமும் அப்படி சொல்லி எங்களுக்குள் சண்டை வருவதற்கு காரணமாகிவிடுவார்" என்றார்கள்.


Click it and Unblock the Notifications











