என்ன பொண்ணுடானு பசங்களை சொல்ல வெக்கனுமாம்.. ஆல்யா மானசாவின் பேச்சைக் கேட்டு காரித்துப்பிய கணவர்!

சென்னை: சின்னத்திரை தம்பதியர்களின் மக்கள் மத்தியில் அபரிமிதமான அன்பைப் பெற்றவர்களில் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மனசா தம்பதியருக்கு தனி இடம் உண்டு. இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் இணைந்து பணியாற்றினார்கள். சீரியலில் இவர்களின் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் இருவரும் காதலிப்பதாக பேச்சுகள் அடிபட்டது. இவர்கள் காதல் திருமணத்தில் முடிய, இப்போது இரண்டு குழந்தைகளுடன் செம ஜாலியான குடும்பமாக உள்ளார்கள். இந்நிலையில் ஆல்யா மானசா தனது கணவரை அருகில் வைத்துக் கொண்டு, ஆண்கள் தன்னை நோக்கி கவனம் திருப்ப என்னவெல்லாம் செய்வார் என்பது குறித்து பேசிய வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆல்யா மானசா, அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி நெடுந்தொடரில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், கடைசியில் இரு வீட்டாரும் சம்மதித்து ஏற்றுக் கொண்டார்கள். திருமணத்திற்குப் பின்னர் சில ஆண்டுகள் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார்.

Serial Actress Alya Manasa Opens About How She Likes Men Flirting To Her Throwback Video
Photo Credit:

ஆல்யா மனசா: அதற்குள் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து விட, அதன் பின்னர் பரபரப்பாக நடிப்பில் குதித்துவிட்டார். ராஜா ராணி 2, இனியா என கலக்கி வந்தார். தற்போது கயல் நாடகத்தில் நடித்து வரும் இவர், ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரிலும் கமிட் ஆகியுள்ளார். ராஜா ராணி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் எப்படி வரவேற்பைப் பெற்றாரோ, அதேபோல் இனியா நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர் ஜூ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் நடிக்க உள்ளார் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அந்த சீரியலுக்காக காத்துக் கொண்டுள்ளார்கள்.

த்ரோபேக் வீடியோ: இந்நிலையில் இணையத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில், ஆல்யா மானசா தனது கணவரை அருகில் வைத்துக் கொண்டு, ஆண்கள் தன்னைப் பார்க்க என்னவெல்லாம் செய்வார் என்று கூறியுள்ளார். அதாவது அந்த வீடியோவில், " அந்த பையன் கூட நாம டிராவல் செய்யப்போவது கிடையாது. ஆனால் அந்த நொடி, அந்த பையன் என்னைப் பார்க்க வைப்பதற்கு நான் எல்லாமே செய்வேன். அதன் பின்னர் அந்த பையன் எனக்கு புரபோஸ் செய்ய வைக்கவும் நான் எல்லாம் செய்வேன். அப்படி புரபோஸ் செய்ய வந்தால் அச்சச்சோ என்று விட்டுவிடுவேன். இது வந்து எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்த கேம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

காரி துப்பிய கணவர்: என்ன பொண்ணுடா என அந்த பையனை நாம் சொல்ல வைக்கனும், ஆனால் நாம் அவனுக்கு கிடைக்க கூடாது. அதுதான் அந்த இடத்தில் ட்விஸ்ட்" என்று பேசுகிறார். இவரது இந்த பேச்சைக் கேட்ட இவரது கணவர் காரி துப்புவது போல பாவலா செய்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் கமெண்ட்களை வாரி வழங்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X