Shakeela - முன்னாள் காதலருக்கு நேர்ந்த கொடுமை.. யப்பா ஷகீலாவுக்கு எவ்வளவு ஹேப்பி பாருங்க

சென்னை: Shakeela (ஷகீலா) நடிகை ஷகிலா மொத்தம் மூன்று காதல்கள் செய்திருக்கிறார். அதில் ஒருவருக்கு சமீபத்தில் நேர்ந்த கொடுமை குறித்து ஷகிலா மனம் திறந்து பேசியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் முன்னாள் காதலர் நிம்மதியாக இல்லாததை பார்த்து ஷகிலா எவ்வளவு சந்தோஷப்படுகிறார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

ஷகீலாவை ஓங்கி அறைந்த சில்க் ஸ்மிதா: இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஷகீலாவை சில்க் ஸ்மிதா அறைய வேண்டும். அந்த காட்சி எடுக்கப்படுவதற்கு முன்பு சில்க்கிடம் சென்ற ஷகீலா எப்படி அறைவீர்கள் என கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஷகீலாவை சில்க் ஸ்மிதா ஓங்கி அறைந்துவிட்டார். சில்க் ஸ்மிதா அப்படி நடந்துகொண்டதை இன்றுவரை தன்னால் மறக்க முடியவில்லை என ஷகீலா பலமுறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Shakeela Shares about her past 3 Loves and ex lovers

மோதிர கையால் குட்டுப்பட்ட கதை: சில்க் ஸ்மிதாவின் கையால் அறை வாங்கியதாலோ என்னவோ அவருக்கு போட்டியாகவே திரையுலகம் ஷகீலாவை முன்னிறுத்தியது. அதற்கு தகுந்தாற்போல் ஷகீலாவும் பல அடல்ட் படங்களில் நடித்தார். சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து இறந்துபோக அவரது இடத்தை ஷகீலா கிட்டத்தட்ட நெருங்கினார். ஆனால் சில்க் இடத்தை அவரால் முழுவதுமாக பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் ஷகீலாவின் வளர்ச்சி அசுர வேகத்திலேயே இருந்தது.

100 நாள்கள் ஓடிய படம்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

சமீபத்தில் ஷகீலா அளித்த பேட்டியில்கூட, என்னுடைய படங்கள் வெளிவராமல் இருக்க மம்மூட்டி சதி செய்தார் என வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதற்கிடையே 2001ஆம் ஆண்டிலிருந்து அவர் மலையாள சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தமிழில் ஜெயம், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார்.

அடையாளத்தை மாற்றிய குக் வித் கோமாளி: ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனிதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் நமிதா என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று காதல்கள் செய்த ஷகீலா: இப்படி வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த ஷகீலாவின் காதல் கதை குறித்து தெரியவந்திருக்கிறது. ஷகீலா மொத்தம் மூன்று காதல்கள் செய்திருக்கிறாராம். அதாவது 10 வயதில் சுரேஷ் ரெட்டி என்பவரை முதல் காதல் செய்தாராம் ஷகீலா. சுரேஷ் ரெட்டியை காதலித்துக்கொண்டிருக்கும்போதே பள்ளியிலும் ஒருவரை காதலித்தாராம் ஷகீலா.

ஷகீலாவுக்காக அடித்துக்கொண்ட காதலர்கள்: ஒருநாள் ஷகீலாவுக்காக சுரேஷ் ரெட்டியும், இன்னொருவரும் சாலையில் அடித்துக்கொண்டார்களாம். அப்போது ஷகீலாவின் அண்ணன் இந்த இரண்டு பேரில் நீ யாரை லவ் பண்ற என்று கேட்டாராம்.

அதற்கு உடனே ஷகீலா, என்ன அண்ணா இப்டி கேக்குறீங்க. வீட்ல சுரேஷ் ரெட்டிய லவ் பண்றேன். ஸ்கூலுல அவன லவ் பண்றேன் என ஒரே போடாக போட்டாராம். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அண்ணன், இவளுகு லவ்னா என்னனே தெரியல போங்கடா பேசாம என அனுப்பிவிட்டாராம்.

பிரபல நடிகருடன் காதல்: அதேபோல் பிரபல நடிகர் ஒருவரையும் காதலித்திருக்கிறார் ஷகீலா. இருவரும் தீவிரமாக காதலித்துவந்த சூழலில் ஏதோ காரணத்தால் அவர்களின் காதலில் பிரேக் அப்பில் முடிந்திருக்கிறது. இன்றுவரை அந்த நடிகருக்கும் திருமணம் ஆகவில்லையாம். அந்த நடிகரின் பெயரை வெளியிட ஷகீலா மறுத்துவிட்டார். இப்படி இரண்டாவது காதலும் தோல்வியில் முடிய மூன்றாவதாக ஒருவரை காதலித்திருக்கிறார்.

Shakeela Shares about her past 3 Loves and ex lovers

மூன்றாவது காதலருக்கு நேர்ந்த கொடுமை: மூன்றாவதாக காதலித்தவரும் ஷகீலாவுடன் பிரேக் அப் செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டாராம். அதேசமயம் இன்னமும் ஷகீலாவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார் அவர். சூழல் இப்படி இருக்க ஒரு நாள் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த நபரின் மனைவி, ஃபோன வெச்சிட்டு சாப்டுறீங்களா இல்லையா என அதட்டியிருக்கிறார்.

அதற்கு அவர் சாப்பிட்டுக்கொண்டுதானே இருக்கேன் சாப்பாட வை என கூறிவிட்டு என்ன குழம்பு கேட்டா தொக்கு செஞ்சிருக்க என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண், எனக்கு வரதைத்தான் செய்ய முடியும் இஷ்டம்னா சாப்டுங்க என கூறியிருக்கிறார். இத்தனையையும் ஷகீலா ஃபோனில் இருந்தபடி கேட்டிருக்கிறார்.

ஆண்டவன் இருக்கான் குமாரு: இதற்கிடையே அந்த நபர் காதலித்தபோது ஷகீலாவுடன் தங்கியிருக்கிறார். அந்த சமயத்தில், சட்னியில் ஒரு மிளகாய் அதிகமாக போட்டால் உடனே அதை தூக்கி எறிவாராம். அதையெல்லாம் நினைத்துப் பார்த்த ஷகீலா, என்னிடம் நீ எப்டி நடந்துக்குட்ட. இப்ப எப்டி மாட்டிருக்க பார்த்தியா. ஆண்டவன் இருக்கான் என எண்ணிக்கொள்வாராம்.

இதனை ஷகீலா ஒரு பேட்டியில் கூறினார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தனது முன்னாள் காதலர் கஷ்டப்படுவதை ஷகீலா எவ்வளவு ரசிக்கிறார் பாருங்க என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X