அஜித்தைதான் கட்டிப்பேன்.. நீ கிட்ட வராத.. மாதவனையே அலறவிட்ட ஷாலினி.. செம போல்டா சொல்லிருக்காங்க
சென்னை: அஜித்தை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்ட ஷாலினி; சினிமாவில் நடித்த பல வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் அவர் அப்போது நடித்த படங்களை இப்போதும் பலர் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அஜித்தின் மனைவியாகிவிட்டதால் அவரது ரசிகர்களும் ஷாலினியை கொண்டாடுகிறார்கள். சூழல் இப்படி இருக்க மாதவனிடம் அவர் போல்டாக பேசிய விஷயம் பற்றி இதில் பார்க்கலாம்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தவர் ஷாலினி. ஏராளமான படங்களில் நடித்து விருதுகளையும் வென்ற அவர்; தமிழிலும் ராஜா சின்ன ரோஜா, சிறை பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சிறு வயதிலேயே துறு துறுவென்று இருந்த அவருக்கு அப்போதே ரசிகர்கள் ஏராளம். திரைத்துறையினரால் பேபி ஷாலினி என்றும் அழைக்கப்பட்டார் அவர்.
ஹீரோயினாக அறிமுகம்: குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி அனியாதி ப்ராவு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழை பொறுத்தவரை காதலுக்கு மரியாதை படம்தான் அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மினி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த ஷாலினி அழகில் மட்டுமின்றி நடிப்பிலும் மெர்சல் செய்துவிட்டார். எனவே அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

நோ கிளாமர்: காதலுக்கு மரியாதை வெற்றிக்கு பிறகு பிரியாத வரம் வேண்டும், அமர்க்களம், அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த எந்தப் படத்திலும் கிளாமர் ரோல் ஏற்றதில்லை. கிளாமர் ரோல் ஏற்காமல் நடித்தும் கோலிவுட்டில் வெற்றி கொடியை பறக்கவிடலாம் என்று நிரூபித்தவரும் அவர்தான். அதுமட்டுமின்றி சிறு வயதில் தனக்கு இருந்த துறு துறுத்தனத்தை வளர்ந்த பிறகும் விடாமல் வைத்திருந்தது அவரது ப்ளஸ்ஸாக அமைந்திருந்தது.
அஜித்துடன் திருமணம்: இதற்கிடையே அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித்துடன் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேருக்கும் திருமணமும் நடந்தது. திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டிவிட்டார். முழுக்க முழுக்க ஃபேமிலியை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை எடுத்த ஷாலினி; அஜித்துக்கு பக்கபலமாக இருந்துவருகிறார். சமீபத்தில் அஜித் கொடுத்த ஒரு பேட்டியில்கூட, 'என்னை மாதிரி ஒருவனுடன் வாழ்வது கஷ்டம். ஷாலினிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
மாதவன் பேட்டி: இந்நிலையில் ஷாலினி பற்றி நடிகர் மாதவன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், "அலைபாயுதே ஷூட்டிங்கின்போது ஷாலினி என்னிடம், 'நான் அஜித்தைத்தான் கல்யாணம் செய்துகொள்ள போகிறேன். நீ ரொமான்ட்டிக் சீனில் ஓவராக நடிக்காதே. பக்கத்தில் வராமல் தூரமாக நின்று செய் என நிறைய தடவை சொல்லியிருக்காங்க. அதற்கு நானோ, ஹே இங்க பாரு எனக்கும் சரிதாவுடன் திருமணம் நடக்கப்போகுது. நீயும் பக்கத்தில் வராத என்று சொல்வேன். ஆனால் அவர் சொன்னது உணர்வுப்பூர்வமாக இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











