சிம்பு, அசின், எஸ்.ஜே. சூர்யா.. இந்த சம்பவம் எப்போ நடந்துச்சு?.. நல்ல விஷயத்தை மிஸ் பண்ணிட்டாரே!
சென்னை: நடிகர் சிம்பு பல பெரிய கூட்டணிகளை சில பல காரணங்களுக்காக பல முறை மிஸ் செய்து தனது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளார். அப்படி மிஸ் பண்ண ஒரு படம் தான் அசினுடன் ஜோடி போட்டு அவர் நடிக்க வேண்டிய படம். அந்த படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்கவிருந்தார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தரின் மகனான சிம்பு என்கிற சிலம்பரசன் குழந்தை பருவத்திலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அப்பா நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தூள் கிளப்பிய சிம்பு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தம், குத்து, மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், வாலு, அச்சம் என்பது மடமையடா, வந்தா ராஜாவா தான் வருவேன், இது நம்ம ஆளு, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஈஸ்வரன், மாநாடு, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு, பத்து தலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சகலகலா வல்லவன்: அப்பா டி ராஜேந்தரை மிஞ்சும் அளவுக்கு சினிமாவில் பல விஷயங்களை கற்றுக் கொண்டு திரையுலகில் சகலகலா வல்லவனாக வலம் வருகிறார் சிம்பு. நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் சிம்பு என்பது சினிமாவில் உள்ள அனைவரும் அறிந்த விஷயம் தான். சில பல குறைகள் அவரிடம் இருப்பதாக அடிக்கடி சர்ச்சைகள் எழுவது வழக்கம். ஆனால், நடிப்பில் அவர் டாப் கிளாஸ் என்பதை அடிக்கடி நிரூபித்து மாஸ் காட்டி வருகிறார்.
கமலுடன் கூட்டணி: கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்க உள்ள சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் தக் லைஃப் படத்திலிருந்து விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அசோக் செல்வன் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா: கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சிம்பு இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்புதான் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டார். உண்மையை பேசுபவர்கள் தான் இங்கே அதிகம் கஷ்டப்படுகின்றனர். நான் நிறைய உண்மையை பேசி உள்ளேன் என சிம்பு கூறினார். மேலும், ஓட்டுப் போடாதது தவறுதான். ஆனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு ஓட்டுப் போட வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்று பேசினார். சிம்புவின் இந்த பேச்சை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில்: சிம்பு, அசின் இணைந்து எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் 'ஏசி' எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால், அந்த படம் அதன் பின்னர் உருவாகாமல் அப்படியே டிராப் ஆகி விட்டது. இந்நிலையில், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர். செல்வராகவன் இயக்கத்தில் கான், சிம்பு, லேகா வாசிங்டன் நடித்த கெட்டவன், நெல்சன் இயக்கத்தில் உருவாக இருந்த வேட்டை மன்னன் என பல படங்களை சிம்பு மிஸ் செய்து விட்டார். பொன்னியின் செல்வன் படத்தில் கூட வந்தியத்தேவனாக முதலில் சிம்பு தான் நடிக்க வேண்டியது என்றும் கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications











